• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்தவர் உயிருடன் வந்த ஆச்சரியம்

October 5, 2017 தண்டோரா குழு

ஜெய்ப்பூரில் இறந்தவர் என்று எண்ணி தகனம் செய்யப்பட்ட நபர், மீண்டும் உயிருடன் வந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலதின் ஹனுமன்கர் மாவட்டத்திலுள்ள குலுவாலா நகரைச் சேர்ந்தவர் 27 வயது ராஜு தேவி. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது சகோதரரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், அவர் உள்ளூர் பத்திரிக்கையில் வெளியான இறந்தவர் ஒருவரின் புகைப்படத்தைக் கண்டு, அது அவருடையை மூத்த சகோதரர் கலுராமின் புகைப்படம் என்று அடையாளம் காண்பித்தார்.

இதையடுத்து, கலுராமின் உடலை பெற்றுக்கொண்ட ராஜு தேவியின் குடும்பத்தினர் பெற்று கொண்டு, இந்து முறைப்படி அவரது உடலை தகனம் செய்தனர்.

இந்நிலையில் கலுராமின் உறவினர் ஒருவர், கலுராமின் மரணம் குறித்து ஏதேனும் தகவல் கிடைக்கும் என்று எண்ணி, மீண்டும் அவருடைய கைபேசியை தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் கலுராம் பேசியுள்ளார். அந்த உறவினர் கொடுத்த தகவலையடுத்து சகோதரியின் வீட்டிற்கு கலுராம் வந்துள்ளார். அவரை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தான் வேறு ஒருவரை சந்திக்க சென்றபோது, தனது கைபேசியின் பேட்டரி செயல் இழந்துவிட்டது என்று தெரிவித்தார். அப்போதுதான், தவறுதலாக வேறு ஒருவரின் உடலை தகனம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

“ராஜஸ்தானின் லால்கர் காவல்நிலைய வரம்பிலுள்ள தாலியன்வாலி கிராமத்தின் மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலின் புகைப்படத்தை உள்ளூர் பத்திரிக்கையில் கண்ட ராஜு தேவி, அதிலிருந்தவர் தனது மூத்த சகோதரனின் சாயலில் இருந்ததால், அதை அவருடைய சகோதரனின் உடல் என்று தெரிவித்தார். அந்த கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு, ராஜு தேவி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இறந்தவர் யார் என்று கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் படிக்க