• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலங்கை கடற்படை கைது செய்த இந்திய மீனவர்களை மீட்க பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

December 21, 2016 தண்டோரா குழு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமருக்குத் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் என்று கூறி, இந்திய மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2௦) கைது செய்துள்ளது. இது தொடர்பாக அவர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து பிடித்துச் செல்வதைத் தடுக்கும் வகையில், உறுதியாக அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் பிரதமரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்த மறுநாளே இச்சம்பவம் நடந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஏழு மீனவர்களும் ராமேஸ்வரத்தை சேர்ந்த மூன்று மீனவர்களையும் தலைமன்னார் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர் என்று இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களைக் கைது செய்து, அவர்களுடைய படகுகளையும் காங்கேசன்துறை துறைமுகத்துக்குக் கொண்டுசென்று சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பகுதியில் இருந்து 2௦ மீனவர்கள் இரண்டு இயந்திரப் படகுகள், ஒரு நாட்டுப் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு தெற்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை அதிகாரிகள் அவர்களைச் சுற்றி வளைத்துள்ளனர். ஒரு படகில் இருந்த மீனவர்கள் தப்பித்துவிட்டனர். ஆனால், மற்றொரு படகில் இருந்த 12 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து தலைமன்னாருக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவு இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்தது. ஆனால், ஆங்கிலேய ஆட்சி முடிந்த பிறகு, இலங்கை அந்தத் தீவுக்குச் சொந்தம் கொண்டாடியது. 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவும் இலங்கையும் கச்சத் தீவு இரு நாடுகளுக்கும் சொந்தமானது என்று ஒப்பந்தம் செய்துகொண்டனர். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

அதற்குப் பிறகு, அவ்விடம் இந்திய மீனவர்களுக்கு அதிக பிரச்சனை தரும் இடமாக மாறிவிட்டது. அதனால், கச்சத் தீவை இந்தியாவுக்குத் திருப்பி தருவதுதான் மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்திர தீர்வு ஆகும்.

மேலும் படிக்க