• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘இல்லீகல் மைனிங்’ செய்யாதீங்க – குவாரி சங்கத் தலைவர் கேசிபி சந்திர பிரகாஷ் பேச்சு

September 1, 2023 தண்டோரா குழு

தமிழக கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம் கோவை பீளமேட்டில் நடந்தது.இதில் கோவை, ஈரோடு,திருப்பூர்,கரூர்,பெரம்பலூர், நாமக்கல்,சேலம் மாவட்டங்களை சேர்ந்த கிரசர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இதில் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கேசிபி சந்திரபிரகாஷ் கலந்து கொண்டு பேசியதாவது,

குவாரி தொழிலை தூய்மைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த தொழில் செய்பவர்களை கேவலமாக பேசி வருகிறார்கள்.‌ நமது சங்கம் அரசு மற்றும் கனிமவளத்துறையுடன் இணைந்து இந்த தொழிலை தூய்மைப்படுத்தும் வகையில் செயல்பட போகிறது.

முதல் கட்டமாக சங்கத்தை சார்ந்த குவாரி உரிமையாளர்கள் ராயல் டி சீட்டு வாங்கி கனிம பொருட்கள் கொண்டு செல்ல வேண்டும்.‌ சட்டவிரோதமாக கனிம பொருட்களை எடுக்கக் கூடாது. 7 மாவட்டங்களில் இதை முறையாக பின்பற்ற வேண்டும்.பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு குவாரிகள் மட்டும் இருக்கிறது. அங்கேயும் இந்த நடைமுறையை முறையாக பின்பற்ற வேண்டும்.

சட்டவிரோதமாக குவாரிகளில் இருந்து கனிம பொருட்களை இன்று முதல் எடுக்கவே கூடாது. அப்படி செய்தால் சங்கம் சார்பில் அரசு மற்றும் கனிமவளத்துறைக்கு புகார் தெரிவிக்கப்படும்.மாநில சங்கத்தின் அறிவுறுத்தல் படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.சட்டவிரோதமாக கனிம பொருட்களை எடுக்க பயன்படுத்தும் இயந்திரங்களை எடுத்துச் சென்று விடுங்கள். அனுமதி இல்லாமல் சிறு கற்களை கூட எடுக்க கூடாது.

சட்டவிரோதமாக கனிமம் எடுத்தால் அபராதம் மட்டுமல்ல ஜெயிலுக்கு போக வேண்டிய நிலைமையும் வந்துவிடும். அமைச்சர் பொன்முடி மீது கடந்த காலத்தில் அவர் பதவியில் இருந்த போது சட்டவிரோதமாக கனிமம் எடுத்ததாக வழக்கு போட்டார்கள். இப்போதும் அவர் அமைச்சர் இருந்தபோதிலும் வழக்கு அப்படியே இருக்கிறது.

அவருக்கே அந்த நிலை என்றால் நமது தொழில் அதிபர்கள் நிலைமை என்ன ஆகும் என நினைத்து பார்க்க வேண்டும். 100 சதவீதம் நாம் முறையாக அனுமதி பெற்று கனிம பொருட்களை எடுக்க வேண்டும். மீறினால் சங்கம் சார்பில் கனிமவளத்துறையில் புகார் தரப்படும். அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

மேலும் படிக்க