March 19, 2016 தைலாம்பாள்
சில தினங்களுக்கு முன்பு கோவையில் இரு பச்சிளங்குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக்கி கொடூரமாகக் கொன்ற சம்பவம் நினைவிருக்கலாம்.அதன் சுவடு மறைவதற்கு முன் இதோ இன்னொரு சம்பவம்.
அபாய் மொதானி ஹைதராபாத்தில் உள்ள ஷாகினாயாத்காஞ் என்ற நகரைச் சேர்ந்த 10 ம் வகுப்பு மாணவன்.இவனது பெற்றோர்கள் அப்பகுதியில் மறு சுழற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
புதன் கிழமையன்று என்றும் போல் விளையாடச் சென்ற மகன் வெகுநேரமாகியும் திரும்பி வராததை அடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையில் சிறுவனைக் கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள் ,சிறுவனை உயிரோடு ஒப்படைக்க வேண்டுமென்றால் 10 கோடி ரூபாய் தர வேண்டுமென்று மிரட்டியுள்ளனர்.பிறகு 5 கோடிக்கு இறங்கியுள்ளனர்.
ஆனால் அபாய் மொதானியின் தந்தை ,தன்னால் அவ்வளவு பெரிய தொகை அளிக்க முடியாதென்றும்,வேண்டுமென்றால் ஒரு சில லட்சங்கள் தருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் காவல் துறையின் தீவிர வேட்டையின் காரணமாக , ஒரு மனிதன் அச்சிறுவனை தன் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் காட்சியை சி.சி.டி.வி.காமிரா மூலம் கண்டு பிடித்தனர்.
அந்த மனிதனின் அடையாளங்களையும்,தொலைபேசியின் சம்பாஷணைகளையும் கருத்தில் கொண்டு காவல் துறையினரால் 10 தனிப்படை முடுக்கி விடப்பட்டது.
தங்கள் கோரிக்கைக்கு எந்த பயனும் இல்லை என்ற கோபத்தில் ,கடத்தல்காரர்கள் அச்சிறுவனைக் கொன்று ,செகந்திராபாத்தில் ஒரு ஹோட்டலில் உள்ள டி.வி.பெட்டியில் அடைத்து வைத்து விட்டனர்.
காவல் துறையினர் அதை அறிந்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ள்னர்.
இக்கொலைக்குக் காரணம் ,அச்சிறுவனின் தந்தையின் நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் தொழிலாளியாகவும் இருக்கலாம்,என்ற கோணமும் ஆராயப்படுகிறது.