July 24, 2017
தண்டோரா குழு
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல்வாதிகள் குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.இதனால் தமிழக அமைச்சர்களுக்கும் கமலுக்கு கருத்து போர் நடந்து வருகிறது.
இதற்கிடையில், தமிழக அரசை கண்டித்து சென்னையின் பல இடங்களில் கமல் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது சமூகவலைத்தளத்திலும் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
‘தரம் தாழாதீர். வசைபாடி சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்குப் போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும்’. இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.