August 26, 2022 தண்டோரா குழு
ஈடி மணி, இந்தியாவின் மாபெரும் பரஸ்பர நிதி செயலி மற்றும் வேகமான வளர்ச்சி பெற்று வரும் முதலீட்டுக்கான ஆலோசனை தளம், ஒரு லட்சம் முதலீட்டாளர்களின் மனநிலையை அறிந்து சமீபத்தில், “இந்தியா முதலீட்டாளர்களின் ஆளுமை அறிக்கை 2022” வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, அவர்களது தனித்தன்மை அடிப்படையில் நான்கு வகையாக மதிப்பீடு செய்யப்பட்டது. சிரத்தை சகிப்புத்தன்மை, நஷ்டத்தின் மீதான வெறுப்பு, நிதி மேலாண்மை ஆதிக்கம் மற்றும் அதீத நம்பிக்கை போன்றவைகள் அலசி ஆராயப்பட்டு முதலீட்டாளர்களின் மனநிலை அறியப்பட்டது.
இந்த மதிப்பீடானது, அவர்களது முதலீட்டின் 8 வகையான ஆளுமைத்தனித்தன்மையை வெளிப்படுத்துவதாக இருந்தது. நிதி திட்டமிடும் இந்திய முதலீட்டாளர்கள் 35 சதவீதம் பேர். இவர்கள், உடனடி நடவடிக்கையில் இறங்கி, லாப, நஷ்ட கணக்கீடு செய்து முதலீடு செய்பவர்கள். 31 சதவீதம் பேர் நேர்த்தியாகவும், சரியான நேரத்தில், அதிக தன்னம்பிக்கையுடன் சிரத்தை எடுத்து முதலீடு செய்பவர்கள். பிற வகையில் 34 சதவீதத்தினர், பாதுகாப்பாகவும், ஆராய்ந்து, தேடி, சவலாக ஏற்பவர்கள், ஆராய்ச்சி செய்து, உற்றுநோக்கி முதலீடு செய்பவர்கள்.
இந்த முடிவின்படி, இந்தியர்கள், 52 முதல் 81 வரையிலான புள்ளிகளில் சிரத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பிட்ட தொகைக்கு தங்களை தயார் செய்து கொண்டு வசதியாக சிரத்தையை மேற்கொண்டு முதலீடு செய்கின்றனர். நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் அதிக சிரத்தை எடுக்கின்றனர். நல்ல பயன் பெறுகின்றனர். குறைவான சிரத்தை எடுப்பவர்கள், அதிகமான அளவில் பங்குகளில் முதலீடு செய்கின்றனர். சிரத்தை எடுக்கும் திறனை புறக்கணிக்கின்றனர்.
பெரும்பாலான இந்திய முதலீட்டாளர்கள், குறைவான சிரத்தை எடுத்து, அதற்கேற்ற நஷ்டத்தை சந்திக்கின்றனர். அதிக சிரத்தை எடுப்பவர்கள், சந்தையின் ஏற்றத்தாழ்வு அவர்களை அசவுகரியப்படுத்துகிறது.
இந்த ஆய்வறிக்கையின்படி, அதிக நிதி ஆளுமைத்திறன் கொண்டவர்கள், சரியாக திட்டமிட்டு பெருமளவு தொகையை முதலீடு செய்கின்றனர். இதனுடன் முறையான முதலீட்டு திட்டத்தையும் மேற்கொள்கின்றனர்.
குறைவான சிரத்தை எடுப்பவர்கள், முறையான முதலீட்டு திட்டத்தை (எஸ்ஐபி) மட்டும் மேற்கொள்கின்றனர். ஆண் முதலீட்டாளர்களை விட, பெண் முதலீட்டாளர்கள், மிகவும் கவனமுடன் ஒழுங்குடன், முன்பே திட்டமிட்டு, ஆய்வு செய்து முதலீடு செய்கின்றனர்.
இது குறித்து ஈடி மணியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான முகேஷ் கல்ரா பேசுகையில்,
“உங்களது பணம் வளர்ச்சியானது, உங்களது முதலீட்டை பொறுத்தது. இந்த முதலீட்டு தன்மையானது, நேர்த்தியான முதலீட்டு முடிவெடுக்க உதவும். ஈடி மணியின் இந்தியா முதலீட்டாளர்களின் ஆளுமை அறிக்கை 2022, தற்போதுள்ள உண்மையான சுழ்நிலையை உணர்த்தும். இந்திய முதலீட்டாளர்கள், நஷ்டத்தை அளவீடு செய்யாமல் முதலீடு செய்கின்றனர். சிறந்த முடிவுகளை மேற்கொள்ள உங்களது எண்ணங்களை ஒதுக்கி விட்டு, முதலீடு செய்ய தூண்டுவது எது என்பதை ஆராய வேண்டும்.
இது ஒன்றே ஈடி மணி ஜெனிசிஸ், முதலில் பயன்படுத்துவோரை அறிவோம் என்ற நோக்கத்திற்கான காரணமாக உள்ளது. அவர்களது கஷ்ட நஷ்டங்களை தாங்கும்திறன் அறிந்து முதலீட்டு திட்டங்களை வகுத்துள்ளது. இந்திய முதலீட்டார்களை, முதலீட்டின் மீதான அதிக லாபம், சந்தையில் விரைவு இந்திய முதலீட்டாளர்களை முடிவெடுக்க வைக்கிறது. அதிகம் பரவியுள்ள இந்த பழக்கத்தை எதிர்கொள்வது அவசியம். ஈடி மணி ஜெனிஸ், ஒரு உறுப்பினர் சேவை. இந்த வகையில், முதலீட்டின் நோக்கம், அதிகபட்ச உயர் வருவாய் ஈட்டித்தர நல்ல முதலீட்டு அட்டவணையை அளிக்கிறது.