• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்தார் மு க ஸ்டாலின்

February 24, 2023 தண்டோரா குழு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கோவை வந்தார்.

ஈரோடு மாவட்டம் கிழக்குத் தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அத்தொகுதியில் பிரச்சாரங்கள்,வாக்கு சேகரிப்புகள் தீவிரமடைந்துள்ளது.நாளையுடன் பிரச்சாரங்கள் வாக்கு சேகரிப்புகள் முடிவடையும் நிலையில் அத்தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மூத்த வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

அதற்காக விமானம் மூலம் தற்போது கோவை வந்தடைந்த முதலமைச்சருக்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்,மேயர் கல்பனா ஆனந்த்குமார்,துணை மேயர் வெற்றிச்செல்வன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், உளவுத்துறை ஐஜி டேவிட்சன், கூடுதல் டிஜிபி சங்கர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் அரசு சார்பில் வரவேற்றனர்.

மேலும் கோவை விமான நிலையத்தில் திமுக கட்சியின் சார்பில் தொண்டர்கள் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது காரில் இருந்து இறங்கி தொண்டர்கள் அளித்த அன்பளிப்பை பெற்று கொண்டார்.விமானம் மூலம் கோவை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக ஈரோடு செல்கிறார். நாளை ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்புகிறார்.

மேலும் படிக்க