January 26, 2022
தண்டோரா குழு
கோவை ஈஷா யோகா மையத்தில் 73-ம் ஆண்டு குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது.
கொண்டாட்டத்தில் கொடியேற்றி பேசிய சத்குரு,
“தமிழ்மக்கள் அனைவருக்கும் 73-வது குடியரசுதினநல்வாழ்த்துக்கள். நம் பாரததேசம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் உலகிலேயே மிகவும் பழமையானது; ஈடு இணையற்றது. பொதுவாக ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால், அந்நாட்டில் உள்ள மண் வளமாக இருக்க வேண்டும். மண்ணில் இருக்கும் உயிர்சக்தி போய்விட்டால், ஒரு நாடு வளமான நாடாக உருவெடுக்க முடியாது.
துர்திருஷ்டவசமாக அத்தகைய அபாயகரமான சூழலை நோக்கிதான் நம்தேசம் சென்று கொண்டு இருக்கிறது.இந்த குடியரசு தினநாளில் நம்மண்ணை வளமாக வைத்து கொள்ளவும், இந்த தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நலமான வாழ்வு வழங்கவும் நாம் உறுதி ஏற்போம்.” என்றார்.