August 29, 2022
தண்டோரா குழு
கோவை பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் அண்மையில் படகு சவாரி தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில்,உக்கடம் குளத்தில் மோட்டார் படகு இயக்கப்படுவதால், எரிபொருள் கலந்து மீன்கள் இறப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்தப் பகுதியை மீனவர்களுடன் சென்று கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆய்வு செய்தார்.
அப்போது கோவை பெரியகுளத்தில் பெரிய டீசல் படகுகளை இயக்குவதால் மீன்கள் இறப்பதை மீனவர்சங்க பிரதிநிதிகள் நேரில் விளக்கினர்.
மேலும், மீனவர் வாழ்வாதாரத்தை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெடல் படகுகளை மட்டுமே இயக்கலாம் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.