• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து 50 சதவீதம் குறைந்தது

May 5, 2023 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் மே மாதம் 29-ம் தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடை காலமாக இருந்து வந்தது.

இந்த தடை கால சீசனில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைகாலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தடைகாலம் வரும் ஜூன் மாதம் 14-ந்தேதி முடிவடைகிறது. இந்த ஆண்டின் தடை காலம் ஏப்.15ம் தேதி முதல் தொடங்கியது. தடை காலம் தொடங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

அதே சமயம் என்ஜின் பொருத்தப்படாத பாரம்பரிய படகுகள் மூலம் குறிப்பிட்ட எல்லைக்குள் மீன்பிடிக்க தடை இல்லை. நாட்டுப்படகில் மீன்பிடிக்க செல்லலாம். இதனால், தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன் வரத்துகள் குறைந்துள்ளன. வெளிமாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. கோவை உக்கடத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிற்கு வரும் மீன்கள் குறைந்துள்ளது. மேலும், விலையும் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது,

கோவை உக்கடம் லாரி பேட்டை பகுதியில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ளன. 20க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கோழிக்கோடு, கர்நாடக மாநிலம் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் 50 முதல் 60 டன் வரை மீன்கள் வரத்து காணப்படும்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 100 டன் வரை மீன்கள் வரத்து இருக்கும். சங்கரா, வஞ்சிரம், மத்தி, அயிலை, விளை மீன் போன்ற பல்வேறு வகையான கடல் மீன்கள் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மீன் வியாபாரிகளும், திருப்பூர் மாவட்டம் பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளின் மீன் வியாபாரிகளும், குன்னூர், ஊட்டி மீன் வியாபாரிகளும் உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கி செல்கின்றனர். இதுதவிர, கோவை மாநகர மக்கள் நேரடியாக சென்றும் மார்க்கெட்டில் மீன் வாங்குகின்றனர்.

மீன் பிடி தடைகாலம் துவங்கி உள்ளதால் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டு படகில் சென்று மீன்கள் பிடிக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து வரும் மீன்களின் அளவு குறைந்துள்ளது. அதே சமயம் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து மீன்கள் வருகிறது.

தினமும் 60 டன் வந்த நிலையில் தடை காலம் என்பதால் தற்போது 30 டன் வரை தான் வருகிறது. 50 சதவீதம் மீன் வரத்து குறைத்துள்ளது. அதே சமயம் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. மீன் மார்க்கெட்டிற்கு மக்கள் வரத்து எப்போதும் போல் தான் உள்ளது. மீன்கள் வரத்து குறைந்தாலும் மீன் மார்க்கெட்டில் மக்களுக்கு தரமான மீன்களை விற்பணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மீன்களின் விலையும் அதிக அளவில் ஏற்றி வைக்காதவாறும் வியாபாரிகள் நேர்மையுடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரம் தொய்வு இன்றி எப்போதும் போல் நன்றாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க