July 2, 2022 தண்டோரா குழு
உக்கடம் மீன் மார்கெட்டில் வாங்கிய மீனில் இராசயன வாசனை- உணவு பாதுகாப்பு துறையில் புகார் பதிவு செய்தும் பதில் இல்லை என புகார்.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவா. புகைபடக்கலைஞராக உள்ளார். இவர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் வாங்கிய மீனில் இருந்து இரசாயன வாசம் வீசுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
இன்று காலை உக்கடம் லாரி பேட்டை பின்புறம் உள்ள மீன் மார்க்கெட்டில் மத்தி மீன் வாங்கியதாகவும் மீன் எடுக்கும் போதே மீன் உடைந்து வந்ததாகவும் இது குறித்து மீன் விற்பனையாளரிடம் கேட்டபோது மீன் பிடித்து கூடைக்குள் போடும் போது இவ்வாறு நிகழ கூடும் எனவும் மீன் நல்ல மீன்கள் என கூறியதாக தெரிவித்தார்.
பின்னர் வீட்டிற்கு சென்று மீனை சுத்தம் செய்யும் போது பிணவறையில் உபயோகிக்கப்படும் இரசாயன வாசம் வீசியதாகவும் சமைத்த பிறகு சமையலறை முழுவதும் இரசாயன வாசம் வீசியதாக தெரிவித்தார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் கூறினார்.
கொடுக்கின்றன பணத்திற்கு தரமான உணவு பொருட்களை விற்பன செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.