• Download mobile app
28 Nov 2024, ThursdayEdition - 3214
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உக்கடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஓவியங்களால் அழக்கூடிய நிகழ்வின் நிறைவு நாள் கொண்டாட்டம்

December 18, 2021 தண்டோரா குழு

உக்கடம் கலை மாவட்டத்தின் 2-வது பதிப்பு டிசம்பர் 18 சனிக்கிழமையன்று, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் மேலும் 5 சுவரோவியங்களைச் சேர்த்த பிறகு, முடிவுற்றது. கோயம்புத்தூர் சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனின் ஆதரவுடன் ஏசியன் பெயிண்ட்ஸ்-உடன் இணைந்து St+art உக்கடம் கலை மாவட்டத் திட்டத்தைத் தொடங்கியது. கோயம்புத்தூரில் நடந்து வரும் இந்தத் திட்டம் ஓவியக்கலையின் மூலம் எல்லைகளை உடைத்து, குடியிருப்பாளர்களின் அன்றாடப்பிரச்சினைகளை சுட்டிக்காட்ட முயல்கிறது.

டிசம்பர் 18, சனிக்கிழமையன்று இந்த சம்பிரதாயமான நிறைவு விழாவானது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. உக்கடம் கலை மாவட்டத்தின் வரை படத்தை அமைச்சர் வெளியிட்டதைத் தொடர்ந்து சம்பிரதாய உரை மற்றும் திட்டத்தின் போது பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு பாராட்டும் நடைபெற்றது. உள்ளூர் குழந்தைகளின் பல கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பம், தீப்பந்தம் சுழற்றுதல் மற்றும் உள்ளூர் இசைக்குழுவினரின் பிரபலமான இசைக்கச்சேரியும் நடைபெற்றன.

இந்த இரண்டாம் கட்ட நடவடிக்கையில், அன்றாட வாழ்க்கையை ஒரு புதிய மற்றும் பிரகாசமான பரிமாணத்தில் மறு கற்பனை செய்யும் வகையில் ஆப்ஜெக்ட்-சப்ஜெக்ட் தொடர்பைப் பிரதிபலிக்குமாறு அழைக்கப்பட்ட கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். புதிய பரிமாணங்களைத் திறந்து பார்க்கும் முறைகளின் மூலம் மேலிருந்து விவரித்தல், அன்றாட வாழ்க்கையில் ஒரு மாயாஜால உண்மையை விதைக்க முயல்கிறது. இவ்வாறாக, வாழும் சமூகத்தைச் சுற்றி மிகவும் மையமாக இருக்கும் ஒரு உள்ளூர் சமூகத்தில், மக்கள், சமூகங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கதைகளில் கவனம் செலுத்த ஒரு தூண்டுகோலாக பழக்கப்பட்ட பொருட்கள் மாறியது.

“கலை அடிப்படையிலான சமூகமேம் பாடு மற்றும் சமூகத்தினுள் கலை மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான ஒருங்கிணைப்பு” ஆனது ஆரோக்கியமான, அதிகத்துடிப்பான, அதிக சமத்துவமான இடங்களைத் தேடுகிறது. பொதுவாக, கலைஞர்கள், கலை நிறுவனங்கள் மற்றும் கலை சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் ஆகியவை நமது சமூகங்களின் வளர்ச்சி மற்றும் நீண்டகால ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் மதிப்புமிக்க பங்கை வகிக்க முடியும். பெரும்பாலும் ஒரு சமுதாயம் சமூக அக்கறையுடன் போராடும்போது, கலைத்திட்டங்கள் ஒத்திசைவான உரையாடலை வளர்த்து தீர்வுகளையும் மாற்றத்தையும் கொண்டு வரமுடியும். St+art இந்தியா ஃபவுண்டேஷன்-உடன் CCMC இணைந்து உக்கடத்தை நாட்டிலேயே மிகவும் துடிப்பான கலை மாவட்டங்களில் ஒன்றாக மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது” என்று கோவை மாநகராட்சி ஆணையர்
ராஜகோபால் சுங்கரா கூறினார்.

“பெருந்தொற்றானது பொருட்களுடனான நமது உறவை மாற்றிவிட்டது. அன்றாடம் பயன்படுத்தப்பட்ட பல பொருட்கள் ஸ் இருந்தன. சிலர் இதற்கு முன் நிகழ்ந்திராத காலத்தைச் சமாளிக்க புதிய வழிகளை ஏற்றுக்கொண்டனர். இந்தச்சூழலில், உக்கடம் கலை மாவட்டத்தில் St+art- இன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள், சப்ஜெக்ட்/ஆப்ஜெக்ட்-களுக்கு இடையேயான தொடர்பை மறுபரிசீலனை செய்யவதற்காக ஆப்ஜெக்ட்ஸ் மூலமாக தினசரியை மறு கற்பனை செய்ய முயற்சிக்கிறது,” என்கிறார் இத்திட்டத்தின் பொறுப்பாளர் மற்றும் St+art-இன் இணைநிறுவனரான கியூலியா அம்ப்ரோகி.

அவர் மேலும் கூறியதாவது, “எந்தவொரு ‘பொருளும்’, உயிருள்ளவை, உயிரற்றவை, செயற்கையானவை அல்லது கருத்தியல் என எதுவானாலும் ஒருபொருளாகவே கருதப்படுகிறது. பெரும்பாலும் மிகவும் அற்பமானதாகவோ, சாதாரணமானதாகவோ அல்லது ஆர்வத்தைத் தூண்ட வேண்டிய அவசியமில்லாததாகவோ கருதப்படுபவை, ஒருவரின் சுற்றுப்புறத்தைப் பற்றிய விழிப்புணர்வை உயர்த்தும் உரையாடலைச் செயல்படுத்தி, அதை ஒரு புதிய, பிரகாசமான பரிமாணத்தில் பார்ப்பதே நோக்கமாக இருந்தது.இந்த தினப்படி பொருட்கள், கலைஞர்களால் பார்வையாளர்களின் புரிதலின் முன்னணியில் தென்படவும், தொட்டுணரும் திறன், வரலாறு, கைவினைப்பொருள், கலாச்சாரம் மற்றும் வெவ்வேறு பொருட்களுடனான அவர்களின்உறவு, அவற்றை எவ்வாறுபயன்படுத்துகின்றனர், எவ்வாறு கவனித்துக் கொள்கின்றனர் மற்றும் அவர்கள் அவற்றில் உணரும்மதிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கவும் புரிந்து கொள்ளப்படுகின்றன.” என்றார்.

“இத்திட்டம் தொடக்கத்திற்கு முந்தைய மேலோட்டம், சுவரோவியங்கள் மற்றும் பட்டறைகள் & சமூக ஈடுபாடு நடவடிக்கைகள் என மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இது சமூகத்தை பல வழிகளிலும் நிலைகளிலும் ஈடுபடுத்தக் கூடிய மற்றும் அதிர்வலையை ஏற்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்காக செய்யப்பட்டதாகும். இது குடியிருப்பாளர்களுக்கு இத்திட்டத்தில் ஈடுபடுத்திக்கொள்ளும் உணர்வைக்கொடுத்ததுடன் இம்முயற்சிக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவியது, ”என்று St+art-இன் சிறப்பு திட்டங்கள் இயக்குனர் விகாஸ் நாக்ரேரே கூறினார்.

“குடியிருப்பு வாசிகளின் பங்கேற்பு இந்தத் திட்டத்தை மிகப்பெரிய வெற்றியடையச் செய்தது.” என்று RAAC இன் செயலாளர் ரவீந்திரன் ராமசாமி கூறினார். அவர் மேலும் கூறுகையில், “குழந்தைகளிடம் கண்ட உற்சாகம் ஆச்சரியமாக இருந்தது. மற்றும் அவர்கள் முன் வந்து வெவ்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான அவர்களின் ஆரம்பத்தடைகள் அனைத்தையும் தகர்த்தனர். இங்குள்ள சமூகங்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தியமைக்காக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இச்செயல்பாடுகள் மூலம் வழக்கமான ஈடுபாட்டைக்கொண்டிருப்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.

புதுதில்லியில் உள்ள லோதி கலை மாவட்டம், மும்பையில்உள்ள மஹிம் கலை மாவட்டம், ஹைதராபாத்தில் உள்ள மக்தா கலை மாவட்டம், கோவாவில் உள்ள பஞ்சிம் கலை மாவட்டம் மற்றும் சென்னையில் கண்ணகி கலை மாவட்டம் ஆகியவற்றுடன் உக்கடம் கலை மாவட்டம் நாட்டின் 6வது கலை மாவட்டமாகும். ஏசியன் பெயிண்ட்ஸுடன் இணைந்து இந்தக் கலை மாவட்டங்களை மேம்படுத்துவதில் St+art முக்கியப்பங்காற்றியுள்ளது. இந்த கலை மாவட்டங்கள் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள், ஆர்வலர்கள், இராஜதந்திரிகள் ஆகியோரைக் கவர்வதுடன் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களைக் கூட சுவரோவியங்களின்பின்னணியில் படமாக்க ஈர்க்கின்றன.

மேலும் படிக்க