June 12, 2017
தண்டோரா குழு
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை, முட்டை என தமிழகத்தில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்களை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்,
தமிழகத்தில் கலப்படம் தொடர்பான புகார்களை 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். விதிக்கப்படும்.கலப்படம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பக்கூடாது என்றார்.
மேலும், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்றார்.