January 6, 2024 தண்டோரா குழு
உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளை சார்பாக அர்- ரஹ்மான் அகாடமி எனும் இலவச கல்வியகம் கோவை கரும்புக்கடை பகுதியில் ஜனவரி 5 வெள்ளி மாலை 5 மணியளவில் துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை தெற்கு உதவி காவல் ஆணையர் சட்டம் & ஒழுங்கு.ரகுபதிராஜா,86 வது வார்டு மாமன்ற உறுப்பினர்
இ.அஹமது கபீர்,84 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா உசேன், சலீம்
துணை முதல்வர் இஸ்லாமிய மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி,கிரஸன்ட் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி சேர்மென் சுலைமான் ஆகியோர் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்வில் உதவி காவல் ஆணையர் ரகுபதிராஜா மாணவர்களின் ஒழுங்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
இது குறித்து அறக்கட்டளையின் நிறுவனர் அப்துல் ஹக்கீம் கூறுகையில்,
கல்வியில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு, ஸ்போக்கன் இங்கிலிஷ்,கம்பியூட்டர் பயிற்சி, அரசுத் தேர்வுக்கான வழிகாட்டுதல், வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் போன்றவற்றை இலவசமாக வழங்கவுள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளையின் நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர்கள்,பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.