• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உத்தரகண்ட் முதல்வரானார் திரிவேந்திர சிங் ராவத்

March 18, 2017 தண்டோரா குழு

உத்தர கண்ட் மாநில முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 7 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தர கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 15-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அதன் முடிவு கடந்த 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், பாஜக 57 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

உத்தர கண்ட் மாநிலத்தில் மொத்தம் 57 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், முதல்வர் யார் என்பதில் இழுபறி நிலவி வந்தது.
அதையடுத்து, பாஜக சார்பில் உத்தர கண்ட் மாநில சட்டப் பேரவை ஆளும்கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதற்கான எம்எல்ஏ-க்கள் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. அதில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங்ராவத் தலைவராகவும், முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, மாநில ஆளுநர் கிருஷ்ணகாந்த் பாலை சந்தித்த திரிவேந்திர சிங் ராவத், ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைத்தார். அதையடுத்து சனிக்கிழமை காலையில் திரிவேந்திர சிங் ராவத் உத்தர கண்ட் மாநிலத்தின் எட்டாவது முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 7 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு ஆளுநர் கிருஷ்ண காந்த் பால் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க