September 23, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவின் பிரபல கார் புக்கிங் நிறுவனமான உபெரின் உரிமத்தை புதுபிக்க பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது.
அமெரிக்காவின் பிரபல கார் புக்கிங் நிறுவனம் உபெர்.இந்நிறுவனம் இந்திய உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.இந்நிறுவனம் பயணிகளுக்கும் சரியான சேவை அளிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.மேலும் இந்நிறுவனத்தின் உரிமம் காலாவதியாவதால், அதைப் புதுப்பிக்க வேண்டி விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் பொதுமக்களுக்கு உகந்த சேவையை அளிக்க தவறியதாகக் காரணத்தால், இந்நிறுவனத்தின் உரிமத்தைப் புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்
இந்நிலையில் இன்னும் மூன்று வாரங்களுக்கு உபெர் நிறுவனம் லண்டன் நகரில் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளதாக என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.