August 9, 2017 தண்டோரா குழு
ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் ஐஸ்கிரிம் உருகாமல் இருக்க ஒரு புதிய வழியை கண்டுப்பிடித்துள்ளனர்.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஐஸ்கிரிம் என்றால் அதிக பிரியம். எல்லா விஷேசங்களில் ஐஸ்கிரிம் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொரு சுவையும் தனித்தன்மை கொண்டது. ஐஸ்கிரிம்மை வாங்கியவுடன், அது உருகிவிடும் என்பதால், அதை உடனே சாப்பிட்டுவிடுவர்.ஆனால், ஜப்பான் நாட்டின் கனசாவா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஐஸ்கிரிம் உருகி அதன் வடிவம் மாறாமல் இருக்கும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.
ஸ்ட்ராபெரி பழத்திலிருக்கும் ‘பாலிபீனால்’ என்னும் ஒரு திரவத்தை ஐஸ்கிரிம்மில் கலக்கும்போது, அது உருகாமல் இருந்ததை கவனித்துள்ளனர். அதேபோல், ஐஸ்க்ரீமை சுமார் 3 மணி நேரம் அறையின் தட்பவெப்ப வைத்திருந்ததில், அது உருகவில்லை என்பதையும் கவனித்துள்ளனர்.
பாலிபீனால் திரவம் கலக்கப்பட்ட ஐஸ்கிரிம் மீது ஹேர் டிரையரின் சூடான காற்றை அதன்மீது சுமார் 5 நிமிடம் வைத்திருந்தும், அது உருகாமலும் அதன் வடிவம் மாறாமலும் இருந்துள்ளது.
மேலும் சாக்லேட், வெண்ணிலா, மற்றும் ஸ்ட்ராபெரி ஆகிய சுவைகளிலும் உருகாத ஐஸ்கிரிம்களை உருவாக்கலாம் என்று அந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.