June 12, 2017 தண்டோரா குழு
அமெரிக்காவில் திருட்டில் ஈடுபட்டவரைப் போல உருவம் கொண்டிருந்ததால் ஒருவர் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள ரோலண்ட் பார்க் எனும் வணிக வளாகத்தில் பொருட்களைத் திருடியதாககடந்த 1999ல்ரிச்சர்ட் அந்தோணி ஜோன்ஸ்என்பவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.ஆனால், தனக்கு அந்த திருட்டு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சம்பவம் நடந்தபோது தனது காதலியுடன் வேறு ஒரு இடத்தில் இருந்ததாகவும் ஜோன்ஸ் நீதிமன்றத்தில் வாதிட்டார்.எனினும் சிசிடிவி காட்சிகளும் ஜோன்ஸுக்கு எதிராகவே இருந்ததால் அவருக்கு சிறை தண்டனை உறுதி செய்யபட்டது.
இதையடுத்து சிறைக்கு சென்ற பின் தன்னை போன்ற உருவம் கொண்ட ஒரு நபர் இருப்பது சிறைவாசிகள் மூலமாக ஜோன்ஸுக்கு தெரியவந்தது. இதன்பின் தனது வழக்கறிஞர் மூலமாக தொடர்ந்து சட்டபோராட்டம் நடத்தி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஜோன்ஸைப் போலவே உருவ ஒன்றுமை கொண்ட ஒருவர் திருட்டில் ஈடுபட்டிருந்ததும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகிலேயே அவர் வசித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ரிக்கி என்ற அந்த நபரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அதன்பின் இருவரிடமும் நடைபெற்ற விசாரணையைஅடுத்து ஜோன்ஸை விடுவித்து ஜான்சன் கவுண்டி நீதிமன்ற நீதிபதி கெவின் உத்தரவிட்டார்.
ஒரே மாதிரியான உருவ ஒற்றுமை கொண்ட ஒரே காரணத்தினால் 17 ஆண்டுகள் ஜோன்ஸ் சிறை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.