• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்திற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி

September 8, 2021 தண்டோரா குழு

உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை (PLI scheme) திட்டத்திற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

2021-22ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் ஜவுளித்துறையில் மனிதர்களால் உற்பத்தி செய்யப்ப்பட்ட நூல், துணிகள் மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் சார்ந்த 10 பிரிவுகளுக்கு ரூ.10,683 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது PLI(Production Linked Incentive) (உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம்) திட்டத்தின் கீழ் வருவதாகவும். இதற்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய நிர்வாகிகள்,

இத்திட்டத்தை அறிவித்த மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கும் பிரதமருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினர். இந்திய ஜவுளி துறையில் பருத்தியில் உலகளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர்கள் உலகளவில் ஜவுளித்துறையில் 70% MMF(Man Made Fibers)(பாலிஸ்ட், நைலான், டிஸ்போஸ்) ஆக இருக்கும் நிலையில் இந்தியாவையும் MMF ல் மிக சிறந்த உற்பத்தி நாடாக கொண்டு வர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என தெரிவித்தனர்.

அதனடிப்படையில் குறைந்த விலையில் பைபர்களை இந்தியாவிற்கு மத்திய அரசு கொண்டு வருவதாகவும் கூறினர். மேலும் தற்போது இந்த PLI திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என கூறிய அவர்கள் இதனால் ஒரு தொகையை முதலீடு செய்து அரசு குறிபிட்டுள்ள இலக்கிற்கான லாபத்தை ஈட்டினால் லாபத்திற்க்கான ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் இத்திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தினாலும் இதற்கு முன்பே உள்ள பல திட்டங்களிலானும் முதலீட்டாளர்கள் அவர்கள் முதலீடு செய்ததில் 45%70% வரை ஊக்கத்தொகையாக பெற இயலும் என தெரிவித்தனர். இதனால் இந்திய ஜவுளித்துறை வரும் 5 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியை காணும் என கூறினர். இந்த திட்டத்தை தென்னிந்தியாவில் அதிகளவில் கொண்டு வருவதற்கான முயற்சியை எடுக்க இருப்பதாகவும், இது சம்பந்தமாக தமிழக முதல்வரையும் சந்தித்து 10,683 கோடி ரூபாய் திட்டத்தில் குறைந்தது 4000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கிடைக்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும் மத்திய அரசு மித்ரா திட்டத்தின் கீழ் 7 பிரிவுகளுக்கு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கியதில் தமிழகத்திற்கு ஒரு பிரிவு ஒதுக்க ஆவணம் செய்யுமாறு கோரிக்கை வைத்ததாக தெரிவித்தனர்.

இந்த திட்டத்தின் கீழ் தென்னிந்தியாவிற்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்க பெரும் என்றும் மாநில வருவாயும் உயரும் என தெரிவித்தனர். பன்னாட்டு நிறுவனங்களும் நம்முடன் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க