April 26, 2017 தண்டோரா குழு
உலகின் நீளமான முயல் சைமன் ட்ரான்ஸ்லாண்டிக் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் சரக்கு வைக்கும் பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
உலகில் நீளமான முயல் என்று கருதப்பட்ட சைமன் 3 அடி நீளம் கொண்டது.சைமன் லண்டன் விமான நிலையத்திலிருந்து அமெரிக்க நாட்டின் சிகாகோ விமான நிலையத்திற்கு ட்ரான்ஸ்லாண்டிக் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தது. சைமனை சரக்குகள் வைத்திருக்கும் இடத்தில் விமான ஊழியர்கள் வைத்துள்ளனர். ஆனால், சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, விமானத்திலிருந்த சரக்குகளை விமான ஊழியர்கள் இறக்கிக்கொண்டிருந்தபோது, சைமன் இறந்துவிட்டதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சைமனின் உரிமையாளர் எட்வர்ட்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சைமனின் தந்தை டேரியஸ் 4 அடி நீளம் இருந்தது. அவரை விட சைமன் நீளமாக வளருவான் என்று ஆவலோடு இருந்தேன். அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஒருவர் சைமனை என்னிடமிருந்து வாங்கிவிட்டார். அவருடைய பெயரை வெளியிட விரும்பவில்லை. அவரிடம் அனுப்புவதற்காக சைமனை விமானத்தில் அனுப்பி வைத்தேன் . அவனை ஏற்றும்போது அவன் நன்றாக இருந்தான். அதன்பிறகு, ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது. நான் இதற்கு முன் பல முயல்களை விமானத்தில் அனுப்பியிருக்கிறேன். இது போல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
ட்ரான்ஸ்லாண்டிக் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
சைமனின் மரண செய்தி எங்களுக்கு அதிக வருத்ததை தருகிறது. இது குறித்து விசாரனை மேற்கொண்டுளோம். என்றார்.