• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி.

May 4, 2016 தண்டோரா குழு

ஒருவருடைய இழப்பு மற்றவருக்கு லாபம் என்னும் கூற்று எவ்வளவு உண்மை என்பதை இந்த நிகழ்ச்சி உலகிற்கே நிரூபித்து உள்ளது.

ஹவாய் தேசம் இழந்த ஒரு மிகப் பெரிய வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது. ஆம், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி நம் இந்தியாவில் பொருத்தப்பட உள்ளது. இதனால் அறிவியல் சாதனை பட்டியலில் ஒரு அங்கமாக இந்தியா இணைய உள்ளது.

முப்பது மீட்டர் தொலைநோக்கி (Thirty Meter Telescope) (TMT) என்று அழைக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்பு உடைய இந்தக் கருவியை ஹவாய் நாட்டில் உள்ள மௌன கே என்னும் இடத்தில் தான் எழுப்ப முதலில் திட்டம் இருந்தது.

இந்தத் தொலை நோக்கியை கட்ட ஹவாயில் முதலாவதாகத் தேர்வு செய்யப்பட்ட இடம் அங்கு வசிக்கும் சமூகத்திற்கும் புனிதமான இடம் என்பதால் 2015 ல் ஹவாய் நாட்டின் உச்சநீதி மன்றம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.

இந்த TMT அமைப்பின் குழு மாற்று இடத்தைக் குறித்து ஆய்வு செய்யும் போது இந்தியாவின் லடாக் அதற்குச் சரியான இடம் என்று முடிவு செய்தனர். மேலும், இந்தத் திட்டத்திற்காக 215 கோடி ரூபாயை இந்தியா முதலீடு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தொலை நோக்கியின் மூலமாக, நாம் வாழும் அண்டத்தின் இதுவரை மனிதன் எட்டாத புதிய எல்லையை அடைய முடியும். மேலும் வேற்றுகரஹ மனிதர்கள் எங்காவது உள்ளார்களா என்ற ஆய்வுக்கும் இந்தக் கருவி பெரும் உதவியாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்திய வானியற்பியல், இந்திய தொழில்நுட்ப கழகம், பெங்களூரு, வானவியல் பல்கலைக்கழக மையம் மற்றும் வானியற்பியல், புனே ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்காக கடந்த 3 ஆண்டுகள் கடினமாக உழைத்து வருகிறது.

தென் அமெரிக்க நாட்டின் சிலியை இந்த ஆய்வுக்கான மற்றொரு தேர்வாக TMT குழுவினர் கருதுகின்றனர்.

இதற்காக அந்நாட்டின் அறிவியல் தொழில் நுட்பம் (DST) மற்றும் அணு சக்தி துறை உதவி செய்து வருகிறது. இதற்கிடையே, முன்னேற்பாடான கட்டமைப்பு பணிகள் சீனாவின் பிங்-டாங் என்ற இடத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், வானவியலில் இந்தியா ஒரு புதிய மைல்கல்லை நாட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க