June 3, 2017 தண்டோரா குழு
உலகிலேய அதிக உடல் எடை கொண்ட சிறுவனுக்கு சிறப்பு சிகிச்சை மூலம் ஒரே மாதத்தில் 18 கிலோ எடைகுறைக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் எடை பிரச்சனை, சமூகத்தில் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எகிப்து நாட்டை சேர்ந்த இமான் அஹமத்(37) உலகிலேயே அதிக உடல் எடையை கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தோனேசியா நாட்டை சேர்ந்த 1௦ வயது சிறுவன் ஆர்யா பெர்மானா 19௦ கிலோ எடை கொண்டிருந்தான். ஒரே நாளில் அவன் 5 முறை உணவு உட்கொள்வதாலும் நூடில்ஸ் மற்றும் கோலா குடிக்கும் கெட்ட பழக்கத்தால் தான், அவனுடைய உடல் எடை அதிகரித்தது என்று அவனுடைய பெற்றோர் தெரிவித்தனர்.
அதிக எடையால் அவனால் சரியாக நிற்க முடியவில்லை, பள்ளிகூடத்திற்கு நடந்து செல்ல முடியாததால், அவன் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உடல் எடை காரணமாக, அவனுக்கு சரியான ஆடையையும் அவனுடைய பெற்றோரால் வாங்கி தர முடியவில்லை.
மகன் அவதிப்படுவதை பார்த்த பெற்றோர், அவனை மருத்துவரிடம் அழைத்து சென்றனர். அவனை சோதனை செய்த மருத்துவர்கள், அவனுக்கு உணவு கட்டுப்பாடுகளை பரிந்துரை செய்தனர். ஆனால், அதுவும் பயனில்லாமல் போனதால், மருத்துவர்கள் அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, 18 கிலோ குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து டாக்டர் நீயா நந்தியா கூறுகையில்,
“அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்குள் தொடர் சிகிச்சைகள் மூலம் ஆர்யாவின் இரைப்பையின் அளவைக் குறைத்து, மொத்தமாகச் சுமார் 150 கிலோ எடையைக் குறைக்கவுள்ளதாகவும்,அவன் அதிகமாக ஓடியாடி விளையாடும்போது, உடம்பிலிருக்கும் கலோரிகள்(Calories) எளிதாக எரிக்கப்படும். விரைவில் அவனுடைய உடல் எடை குறைந்து, மற்ற குழந்தைகள் போல் நன்றாக வாழ்வான் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.