March 22, 2017 தண்டோரா குழு
உலக அளவில் செலவு குறைவாக ஆகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இதில் சென்னைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.
லண்டனைச் சேர்ந்த பிஸினஸ் எகானமிஸ்ட் இண்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
இந்தாண்டுக்கான உலகின் செலவு குறைவாக ஆகும் நகரங்களின் முதல் பத்து இடங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் பெங்களூரு மூன்றாவது இடத்தையும், சென்னை ஆறாவது இடத்தையும், மும்பை ஏழாவது இடத்தையும், டெல்லி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும் கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் அல்மாட்டி உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.