December 19, 2016
தண்டோரா குழு
உலக அழகி போட்டியில் போர்டிடோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெப்னி டெல் வால்லே(19) 2௦16ம் ஆண்டின் உலக அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நாட்டின் தலைநகரான வாஷிங்டன் டி.சி அருகே உள்ள தேசிய துறைமுகத்தில் 66வது உலக அழகி போட்டி ஞாயிற்றுக்கிழமை(டிசம்பர் 18) நடைபெற்றது. இப்போட்டியில் 1௦௦ நாடுகள் பங்குபெற்றது. 1௦௦ நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துக்கொண்டதால் போட்டி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இறுதி சுற்றின் போது, கென்யா, பிலிப்பின்ஸ், டொமினிக்கன் குடியரசு, போர்டிடோ ரிகோ, மற்றும் இந்தோனேசியா ஆகிய 5 நாடுகளின் அழகிகள் களத்தில் இருந்தனர்.
போட்டி மிகவும் கடுமையாக சென்றுக்கொண்டிருந்தது. இறுதியாக போர்டிடோ ரிக்கோ நாட்டை சேர்ந்த ஸ்டெபானி டெல் வால்லே(19) 2௦16 உலக அழகி போட்டியை வென்றார். இந்தோனேசியாவின் நடாஷா மான்னுஎல்லா இரண்டாவது இடத்தையும், டொமினிக்கன் குடியரசின் யாரித்சா மிகுஎலினா ரேஸ் ராமிரேஸ் மூன்றாவது இடத்தையும், கென்யாவின் எவிலின் ஜம்பி துங்கு நான்காவது இடத்தையும், கட்ரியோனா எலிசா கிரே ஐந்தாவது இடத்தையும் பிடித்தார்.
சட்டம் மற்றும் தகவல் தொடர்பு கல்லூரி மாணவியான ஸ்டெப்னி ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மூன்று மொழிகளையும் சரளமாக பேசக்கூடியவர்.
இந்த வெற்றி குறித்து அவர் செய்தியார்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
இந்த போட்டியை வென்றது தன் நாட்டிற்கும் தனக்கும் கிடைத்திருக்கும் மரியாதை மற்றும் பெருமையாகும். அது மட்டுமின்றி இதன் மூலம் தனக்கு தற்போது மிக பெரிய பொறுப்பு வந்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.