September 29, 2022 தண்டோரா குழு
கோவையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச தரத்துடன் அதிநவீன இதய சிகிச்சைகளை வழங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை,இன்று மருத்துவமனை வளாகத்தில் உலக இருதய தினத்தை அனுசரித்தது.
அத்துடன் ஒரு நாள் இலவச இருதய ஆலோசனை,பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள திருமதி.வேலுமணி அம்மாள் நினைவு அரங்கத்தில் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி , சுவாதி ரோஹித் , தலைமை செயல் அதிகாரி, சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி, மருத்துவமனையின் டீன் டாக்டர்.பி.சுகுமாரன் மற்றும் இருதய நோய் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
இலவச இருதய பரிசோதனை முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. டாக்டர். எஸ்.மனோகரன், டாக்டர்.எஸ்.பாலாஜி, டாக்டர்.மாதேஸ்வரன், டாக்டர். டி.ஆர்.நந்தகுமார், டாக்டர். எஸ்.தேவபிரசாத், குழந்தைகள் இருதயநோய் நிபுணர் ஆர்.விக்ரம் விக்னேஷ், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.தியாகராஜ மூர்த்தி உள்ளிட்டஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் இருதயவியல் நிபுணர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.விஜய் சதாசிவம் முகாமில் பங்கேற்று, முகாமில் பயன்பெற்ற 400க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.
பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இருதய நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்தியாவில் சிறந்த இருதய சிகிச்சையை வழங்கும் முன்னணி மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை விளங்குகிறது.