March 4, 2022
தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில்,உடல் பருமன் மற்றும் வளர் சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை,சார்பாக உலக உடல் பருமன் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதற்கான துவக்க விழாவில், பி.எஸ்.ஜி பல்நோக்கு சிறப்பு மையத்தின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.J.S. புவனேஸ்வரன், வி.ஜி.எம்.மருத்துவமனை இரைப்பை மையத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான பேராசிரியர் டாக்டர் V.G.மோகன் பிரசாத், கண் மருத்துவ ஆலோசகர் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர்,டாக்டர் S.சுரேஷ்பாபு, உடல் பருமன் மற்றும் வளர் சிதை மாற்ற அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பாலமுருகன், தலைமை உணவியல் நிபுணர் V.கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.