• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு ஜும்பா நடனம் மற்றும் வாக்கத்தான் – துவக்கி வைத்த போலீஸ் கமிஷனர்

November 14, 2024 தண்டோரா குழு

உலக சக்கரை நோய் தினத்தை முன்னிட்டு ஜும்பா நடனம் மற்றும் வாக்கத்தான் நிகழ்வு கோவை ரேஸ் கோர்ஸில் இன்று (14.11.2024) காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வை கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் வி. பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதுகுறித்து கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் நிறுவனத் தலைவரும் முதுநிலை நீரழிவு நோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆர் பாலமுருகன் கூறும்போது:-

கோவையில் எங்கள் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நிகழ்வை நடத்தி வருகிறோம்.
மேலும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனையின் சார்பில் நவம்பர் 14 முதல் 24 வரை நீரிழிவு நோயாளிகளுக்கு மாஸ்டர் ஹெல்த் செக்கப் மற்றும் நீரிழிவு நோய், கண், சிறுநீரகம், நியூரோ மற்றும் எலும்பு ஆகியவற்றிற்கான இலவச சிறப்பு ஆலோசனை முகாம் 50 சதவீதம் சிறப்பு சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகின்றது.

மேலும் மருத்துவமனை வளாகத்தில் காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை உணவு கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமை பொது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .
ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி உலக சர்க்கரை நோய் தினமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி 101 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் உள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது. 130 மில்லியன் முதல் நிலை சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. உலகத்திலேயே இந்தியா தான் சர்க்கரை நோயாள்களின் தலைமை இடமாக உள்ளது. இது அனைத்து தரப்பினரிடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா ஒரு வளரும் நாடாக உள்ளதால் மருத்துவ செலவு அதிகப்படுத்தி வருகின்றது. எனவே சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கு உண்டான முறையை நாம் கடைபிடிக்க வேண்டும். நாம் சரியான முறையில் உணவு மற்றும் மருந்து மாத்திரை உட்கொண்டு வருவதால் சர்க்கரை நோயுடன் நல்வாழ்வு வாழலாம் என்பதுதான் இந்த உலக சர்க்கரை நோய்க்கான மைய கருத்தாகும் இவ்வாறு அவர் கூறினார்.

சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை,ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மாவட்டம் 3201,கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையம், ஆர்எஸ்எஸ்டிஐ தமிழ்நாடு அமைப்பு மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இணைந்து கோவையில் இன்று வாக்கத்தான் மற்றும் ஜும்பா நடன நிகழ்வை கோவை ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் நடத்தியது.

இதில் ஏராளமான பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த வாக்கத்தான் பயணமானது கோவை ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க்கில் துவங்கி ரேஸ்கோர்ஸ் வளாகத்தை சுற்றி வந்து மீண்டும் தாமஸ் பார்க் வளாகத்தில் நிறைவுற்றது.

இந்த வாக்கத்தான் நிகழ்வை கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் வி பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்து பேசியதாவது:-

சர்க்கரை என்பது இன்றைக்கு பரவலாக காணப்படும் நோயாக உள்ளது. ஒரு காலத்தில் எனக்கு சர்க்கரை உள்ளது என்று சொல்வது பெருமையாக பார்க்கப்பட்டது. பிறகு தான் அது உடல் நலக்குறைவு என்பது நமக்கு புரிந்தது. அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுவது வாழ்க்கையில் வெற்றிக்கும் ஆரோக்கியத்திற்கும் வழி வகுக்கும். அதிகாலையில் எழுவதோடு உடற்பயிற்சியும் அவசியம். யோகா, நடைபயிற்சி, விளையாட்டு என்று எந்த வடிவிலாவது தினமும் குறைந்தது 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உணவு பழக்கமும் ஆரோக்கிய வாழ்விற்கு முக்கியம்.புரத சத்துக்கள், வைட்டமின் நிறைந்த உணவுகள் அதிகம் சாப்பிடவேண்டும். மாவுசத்து உள்ள உணவுகளை அளவோடு உட்கொள்ள வேண்டும்.பழங்கள், காய்கறி, கீரைகளை அடிக்கடி உட்கொள்வது முக்கியம். வருடம் ஒரு முறையாவது முழு உடற்பரிசோதனை செய்து நோய் வருமுன் காக்க உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பலர் தொடர்ச்சியான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளனர்.காவலர்களுக்கு சர்க்கரை நோய் வர வாய்ப்பு உள்ளதா என அறிய பரிசோதனை முகாம்கள் நடத்துகிறோம். சர்க்கரை நோய் பல்வேறு இருதய பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு மூல காரணமாகிறது.

மாரடைப்பும் சர்க்கரையும் சகோதர, சகோதரிகள் போல இணைந்தே இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வந்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் எச்சரிக்ககையாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் மாவட்ட தலைவர் ரோட்டேரியன் மயில்சாமி, இந்திய மருத்துவ சங்க, தமிழ்நாடு மாநில கிளை, செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையாளர்,சிவக்குமார்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, முதுநிலை மண்டல மேலாளர், கே வேலாயுதம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை எஜுகேஷனல் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மைய நிறுவனத் தலைவரும் முதுநிலை சர்க்கரை நோய் நிபுணருமான ரோட்டேரியன் டாக்டர் ஆர் பாலமுருகன், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர் பிரியா கார்த்திக் பிரபு, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய் சிட்டி தலைவர் ரோட்டேரியன் ஈஸ்வரன், ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மிட்டவுன், தலைவர், ரோட்டேரியன் ஸ்ரீனிவாசன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மேற்கு, தலைவர், ரோட்டேரியன் ராஜேந்திரன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் தெற்கு, தலைவர், ரோட்டேரியன் பாலசுப்பிரமணியன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்ட்ரஸ்ட்ரியல் சிட்டி, தலைவர், ரோட்டேரியன் டாக்டர் உமா பிரபு ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க