July 28, 2017 தண்டோரா குழு
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி அமேசான் நிறுவனர் ஜெப் பிசாஸ் முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வின் படி, உலக பணக்காரர்கள் பட்டியலில் 23 ஆண்டுகளாக பில் கேட்ஸ் முதல் இடத்தை தக்கவைத்திருந்தார். ஆனால் இந்த முறை அமேசான் நிறுவனர் ஜெப் பிசாஸ் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் என அந்த செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜெப் பேசாஸின் சொத்து மதிப்பு 90.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பில்கேட்ஸின் சொத்து மதிப்பு 90 பில்லியன் ஆக உள்ளது. அமேசான் நிறுவனத்தில் 18 சதவீத பங்குகளை ஜெப் பேசாஸ் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.