• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக பாரம்பரிய தினம் இன்று. ஊட்டி மலை ரயில் முறைப்படுத்தப்படுமா?.

April 18, 2016 முகமது ஆசிக்

உலகில் உள்ள எந்த நாடாக இருந்தாலும் அந்நாட்டுக்கு அழகு சேர்ப்பது அதன் பழங்கால சின்னங்கள் தான். இயற்கை எழில் மிகுந்த இடங்கள் கல்வெட்டுகள், ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவை தான் அந்த நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும்.

பழங்கால சிறப்புகளை பாதுகாத்து வைப்பதற்கும் அவற்றின் பெருமைகளை பற்றி உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 1982ம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாகப் பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து 1983ம் ஆண்டு யுனஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. நாளடைவில் இதுவே உலக பாரம்பரிய தினமாக மாறியது. (”World Heritage Day”). அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது.

அதே சமயம் நமது அக்கறையின்மையாலும், கவனிப்பின்மையாலும், நம்முடைய பழங்கால சின்னங்கள் மற்றும் பெருமைகளை ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம்.

நாம் வசிக்கும் ஊரில் கூட ஒரு சில பாரம்பரிய நினைவிடங்கள், சின்னங்கள், கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் இந்த அவசரமான உலகில் அனைவரும் வேகமாகச் செயல்பட்டுக்கொண்டு இருப்பதால் அந்தப் பாரம்பரியத்தை நாம் மறந்து விடுகிறோம். இதனால் நாளடைவில் அது அழிந்து விடுகிறது.

இதற்காக அரசும் அருங்காட்சியகம் அமைத்துப் பாதுகாத்து வருகிறது, ஆனால் அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் அறியாமல் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தும் வருகிறோம். சில சமயங்களில் அரசும் அதுபோன்ற பாரம்பரியத்தைக் கவனிக்க மறந்து விடுகிறது.

உதாரணமாக நீலகிரி மலை ரயில் unescoவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் கரடுமுரடான மலைப்பாதையில் செல்வதன் மூலம் ஊட்டியின் ரம்மியமான வானிலையையும், ஊட்டி மலையின் அழகையும் ரசிக்கலாம். கிட்டத்தட்ட 5 மணி நேர இயற்கை பயணமாக ஊட்டியை அடையலாம்.

இந்த மலை ரயிலில் ஊட்டிக்கு பயணத்தை தொடங்கினால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து,நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களைக் கடந்து 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் ஊட்டி வரும்.

இந்த இயற்கை பயணத்தை அனுபத்தை அனுபவிக்க உலகில் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவ்வளவு இருந்தும் இந்த ரயில் புறப்படும் நேரத்தை மட்டும் சரியாக சொல்ல முடியும். போய்ச் சேருவது என்பது நிச்சயமில்லாத விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் அடிக்கடி மண் சரிவு, வன விலங்குகள் வருகை என ரயில் சேவை நின்றுவிடுகிறது.

யுனஸ்கோவால் பாரம்பரியமிக்கதாக அறிவிக்கப்பட்ட இந்த மலை ரயில் அடிக்கடி நின்றுபோவது உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

அதனைச் சரிசெய்ய நீண்ட நாட்கள் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இயற்கையாக ஏற்படும் மண் சரிவை யாராலும் தடுக்க முடியாது தான். இருந்தாலும் சரியாக ஆய்வு மேற்கொண்டு அதற்கான தீர்வை மத்திய அரசும் தென்னக ரயில்வே துறையும் செய்ய வேண்டும் என்பது தான் கோவை மற்றும் நீலகிரி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க