• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உள்ளாடையை அகற்ற சொன்ன ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

May 9, 2017 தண்டோரா குழு

கேரளாவில் நீட் தேர்வின் போது உள்ளாடையை அகற்ற சொன்ன நான்கு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நீட் எனப்படும், மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கடந்த 7- ம் தேதி நடந்தது. கேரளா மாநிலம் கண்ணுார் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளை ஆடை விதிகளின்படி துப்பட்டா, மற்றும் இரும்பு பொத்தான் பதித்த ஆடைகள், உள்ளாடையை அகற்றி விட்டு தேர்வு எழுதும்படி, தேர்வு மையகண்காணிப்பாளர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஒரு மாணவி தனது உள்ளாடையை கழற்றிவிட்டு தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம், தேர்வு எழுத வந்த பிற மாணவ, மாணவியரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதற்கு கேரளா மாநில முதல்வர் பிரனாயி விஜயன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அந்த மையத்தில் பணி புரிந்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க