July 6, 2017
தண்டோரா குழு
புதுமணத்தம்பதிகளுக்கு பரிசு பொருட்களுடன் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரை அடங்கிய பெட்டியை வழங்க உத்தரபிரதேஷ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து
உத்தர பிரதேஷ் மாநிலத்தில் மிசின் பரிவார் விகாஸ் திட்டம் ஒன்றை தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் புதுமண தம்பதிகளுக்கு தரப்படும் திருமண பரிசுகளுடன், அம்மாநில அரசும் பாதுகாப்பான உடல் உறவு மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ளும் விதமாக, அவர்களுக்கு பரிசு தந்துள்ளது.
அதன்படி, அம்மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார அமைப்பு(ASHA) உறுப்பினர்கள் புதுமண தம்பதியினருக்கு அந்த பரிசை வழங்குவார்கள். அந்த பரிசு பெட்டியில் ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள், டவல், கைக்குட்டை, நகம் வெட்டும் கருவி, சீப்பு மற்றும் கண்ணாடி ஆகியவை அதில் இருக்கும்.
அதோடு குடும்பக்கட்டுப்பாடு, பாதுகாப்பான உடல் உறவு, மற்றும் குழந்தை பிறப்பு இடைவெளி ஆகியவற்றை விவரிக்கும் சுகாதார துறையின் கடிதமும் அதில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.