• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உ.பி.யில் மதுபான விடுதியை திறந்து வைத்து சர்ச்சையில் சிக்கிய பெண் அமைச்சர்

May 30, 2017 தண்டோரா குழு

உத்தரப்பிரதேசத்தில் மதுபான விடுதியை பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுவாதி சிங் திறந்துள்ளது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உ.பி.யில் முதல் அமைச்சர் யோகி அதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதிதாகப் பதவி ஏற்றுள்ளது.யோகியின் அதிரடி உத்தரவுகளால் நாடு முழுவதும் உத்தரப்பிரதேசம் விவாதப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், உ.பி.யின் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்வாதி சிங் கடந்த சனிக்கிழமை தலைநகரான லக்னோவில் ஒரு தனியார் நிறுவனத்தின் மதுபான விடுதியை திறந்து வைத்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“மாநிலம் முழுவதிலும் உள்ள பெண்கள் மதுக்கடைகளை மூடக்கோரி வருகின்றனர். ஆனால், புதிதாக மதுபான விடுதியை திறக்க உ.பி அமைச்சர் நேரில் செல்கிறார். இது உ.பி.யில் மதுவுக்கு ஆதரவளிக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளை காட்டுகிறது. இதைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தும்” என உ.பி மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான அகிலேஷ்சிங் தெரிவித்துள்ளார். அதைப்போல் அமைச்சர் மதுப்பான விடுதியை திறந்து வைத்தற்கு சமாஜ்வாதி கட்சியும் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், அமைச்சர் திறந்து வைத்த மதுபான விடுதிக்கும் முறையான அரசு உரிமமும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து பாஜகவின் உ.பி. மாநில செய்தி தொடர்பாளர் ஷலாப் மணி திரிபாதி கூறுகையில்,

“இந்த சம்பவம் எனது கவனத்திற்கு வரவில்லை. அப்படி சென்றிருந்தால் அது அவரது தனிப்பட்ட நிலையாக இருக்கும். ஆனால், அந்த விழாவுக்கு சென்றது தொடர்பாக அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்த நிகழ்வு தொடர்பான புகைப்படம் கடுமையான விமர்சனங்களுடன் சமூக வலைதளைங்களில் பரவி வருகிறது.

மேலும் படிக்க