August 2, 2017 தண்டோரா குழு
உத்தர பிரதேஷ் மாநிலத்தை விட்டு ஹரியானா மாநிலத்திற்கு குடிபெயர்ந்து விவசாயிக்கு 1.80 லட்சம் மின்சார கட்டணம் வந்துள்ளது.
உத்தர பிரதேஷ் மாநிலத்தின்,நக்லா டெலி கிராமத்தில்,இஸ்லாம் மாலிக் என்னும் தெரு வியாபாரி வசித்து வந்துள்ளார்.கடந்த 1989, தன்னுடைய வீட்டிற்கு மின்சார இணைப்பு வேண்டி, மின்சார துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், ஒரு குடிசைக்கு மின்சார இணைப்பு தர முடியாது என்று அவர்கள் அவருடைய கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.இந்நிலையில் மின்சார இணைப்பு வேண்டுமென்றால், அதிகாரிகளுக்கு 50,00௦0 ரூபாய் லஞ்சம் தரவேண்டும்.
இதையடுத்து, கடந்த 2000ம் ஆண்டு, மாலிக் தனது மகளின் மருத்துவ செலவுகளுக்காக வாங்கிய கடனை அடைக்க, தனது விவசாய நிலங்களை தன்னுடைய நண்பருக்கு விற்றுவிட்டார். அதன் பிறகு, ஹரியானா மாநிலத்தின் பரிதாபாத் நகருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு, மின்சார கட்டண தொகை 1.80 லட்சம் என்ற மின்சார கட்டண ரசீது அவருடைய பெயருக்கு வந்துள்ளது என்று அவருடைய நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மின்சாரத்தை பயன்படுத்தாத அவருக்கு அவ்வளவு பெரிய தொகை வந்திருந்தது, அதிர்ச்சியை தந்துள்ளது.
உடனே, இட்டா நகர் மாவட்ட நீதிபதி, அமித் கிஷோரை சந்தித்த அந்த விவசாயி, தனது நிலையை தெரிவித்துள்ளார். உடனே இது குறித்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.