• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி – அமைச்சர் சாமிநாதன்

October 13, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புகைப்பட கண்காட்சி அரங்கை தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இன்று திறந்து வைத்தார்.

பின்னர் சர்வேத பேரிடர் இன்னல் குறைப்பு தின நிகழ்வினை துவக்கி வைத்து பேரிடங்களில் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நீதிமன்ற உத்திரவு படி போலி பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட இருக்கின்றது. 90 நாட்களுக்குள் குழு அமைக்க உத்திரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி எனவும், இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சி எனவும் தெரிவித்தார்.

இந்த வெற்றி முழுக்க முழுக்க முதல்வரின் நலத்திட்ட உதவிகளுக்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்தார். பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உரிய முறையில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பத்திரிகையாளர்கள் குறித்து நீதிமன்ற உத்திரவு படி அமைக்க இருக்கும் தனிநபர் ஆணையத்தின் மூலம் பத்திரிகையாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

தனி நபர் ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. 90 நாட்களுக்குள் ஆணையம் அமைக்க உத்திரவிடப்பட்டு இருக்கும் நிலையில் 40 நாட்கள் மட்டுமே முடிந்து இருக்கின்றது எனவும் ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும் செய்திதுறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் தெரிவித்தார்.

மேலும் படிக்க