• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஊர்காவல் படையில் பணி புரிய ஆர்வமா ? – கோவை மாவட்ட காவல்துறை அழைப்பு !

September 25, 2021 தண்டோரா குழு

கோவையில் ஊர்காவல் படையில் பணி புரிய ஆர்வமுள்ளவர்களுக்கு மாவட்ட காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக காவல்துறைக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது தான் ஊர் காவல்படை. போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல்துறைக்கு உதவியாகத் தன்னார்வமாக கோயில் மற்றும் இதர பாதுகாப்புப் பணியில் தங்களுடைய ஓய்வு நேரத்தில் பணி செய்ய ஊர்காவல் படையில் சேவை செய்யத் தகுதியுள்ளோரிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

ஊர்காவல் படையில் சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் ?

1)ஆண்,பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் விண்ணப்பிக்கலாம். வயது 18-முதல் 45- வயதிற்குள் இருக்க வேண்டும் (01.09.2021 அன்று)

2)கல்வித்தகுதி-10-ம் வகுப்பு (தோல்வி அல்லது தேர்ச்சி)

3)பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான TC அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

4)நன்னடத்தை மற்றும் உடல் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.

5)கோவை மாவட்ட காவல் துறையின் கீழ் உள்ள காவல் நிலைய எல்லையில் குடியிருப்போர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

6)விண்ணப்பத்தின் அடிப்படையில் உடல்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுள்ளோர் தேர்வு செய்யப்படுவீர்.

7) அரசுப் பணியாளர்கள்/அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிவோரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் எங்கே பெறலாம்?

ஊர் காவல் படையில் சேர விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் ஊர்காவல் படை அலுவலகம் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சியிலிருந்து 28.09.2021-முதல் 13.10 2021-வரை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அதற்கான பெட்டியிலோ 24.10.2021-ம் தேதி மாலை 5 மணிக்குள் சேர்க்குமாறு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க