April 10, 2017 தண்டோரா குழு
எகிப்து நாட்டில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது கட்டாயம் இல்லை என்று அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பர்தா அணிவதால் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெண்கள், மற்ற மாணவர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ள மிகவும் கடினப்படுகிறார்கள் என்று 2௦16ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, வகுப்பிற்கு வரும் இஸ்லாமிய பெண்கள் மற்றும் பேராசிரியர்கள் பர்தா அணிந்துக்கொண்டு வருவது கட்டாயம் இல்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது.
“நோயாளிகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுக்காப்பது அவசியமாக இருக்கிறது என்பதற்காக இந்த உத்தரவு ” என்று அந்த பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டம் குறித்து எகிப்து நாட்டின் அல் அசார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஏம்.பி. அம்னா நோச்சியர் கூறுகையில், “பெண்கள் பர்தா அணிவது தேவையில்லாத ஒன்று. பொது இடங்களிலும், அரசு அலுவகங்களிலும் பர்தா அணிவது கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பை முழுமனதோடு வரவேற்கிறேன்,” என்றார்.