December 2, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ் 30 நம்பிக்கை மையங்களும்,98 துணை நம்பிக்கை மையங்களும்,26 சுகவாழ்வு மைய சிகிச்சை மையங்களும்,2 ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும்,6 துணை கூட்டு மருந்து சிகிச்சை மையங்களும்,4 அரசு ரத்த வங்கிகளும்,7 ரத்த சேகரிப்பு மையங்களும், ஒரு இலவச சட்ட ஆலோசனை மையமும் செயல்பட்டு வருகிறது.
எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உழவர் பாதுகாப்புத்திட்டம்,முதியோர் உதவித்தொகை திட்டம், விதவை உதவித்தொகை திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில்,கோவை சாரதாம்பாள் கோவில் திருமண மண்டபத்தில் உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு நடத்தப்பட்ட சமபந்தி போஜனத்தில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆட்சியர் சமீரன் உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.