March 31, 2017
தண்டோரா குழு
சோனியா காந்தியை இழிவுபடுத்தி பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸினர் கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாககோவை மாநகர ஆணையர் அமல்ராஜிடம் அவர்கள் அளித்த புகாரில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று மாலை தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியை பற்றி மிகவும் இழிவான முறையில் நிறவெறியை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
இதுமட்டுமின்றி சமீப காலமாக அவர் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்ந்து கருத்துக்களை பேசி வருகிறார்.
இவரது கருத்துக்கள் இந்திய ஜனநாயகத்தின் இறையாண்மையை கெடுக்கும் வண்ணம் உள்ளது. இதுமட்டுமின்றி இவரது பேச்சு மற்றும் கருத்துக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரக அமைவதால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.