January 3, 2022 தண்டோரா குழு
எதிர்கால வளர்ச்சியில் கிரிப்டோ கரன்சி முக்கிய பங்காற்ற இருப்பதாக தமிழ்நாடு, கிரிப்ட்டோ க்ளப் உறுப்பினர் சங்கத்தினர் கோவையில் தெரிவித்துள்ளனர்.
கிரிப்ட்டோ கரன்சி பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு, கிரிப்ட்டோ க்ளப் மெம்பெர்ஸ் அசோசியேசன் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
இதில்,சங்கத்தின் விழிப்புணர்வு பயிற்சியாளர் கந்தசாமி பேசுகையில்,.
கிரிப்டோகரன்சி என்பது உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய மெய்நிகர் நாணயம், இது பாதுகாப்பான முறையில், விரைவாக ஒரு நபர் விடுத்து மற்ற நபர்களுக்கிடையே பரிமாற்றம் செய்யக்கூடிய வகையில் வெளிப்படைத் தன்மையோடு பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது எனவும், உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஒரு இடத்திற்கும் பரிமாற்றம் செய்யக்கூடிய மெய்நிகர் நாணயமாக கிரிப்டோ கரன்சி உள்ளது.
பொதுவாக உலகம் முழுமைக்கும், எந்த நாட்டின் பணவர்த்தனைக்கும், அதே மதிப்பில் கிடைக்கும், ஒரு நாட்டினுடைய, பணம் வேறு ஒரு நாட்டில் உள்ள மாற்றம் செய்யப்படும் பொழுது, அந்த பணத்தின், மதிப்பு குறைபாடு, என்பது மாறுபடும், இதனை தவிர்க்கவும், இடைத்தரகர்கள் செலவுகளை தவிர்க்கவும், உருவாக்கப்பட்டதே கிரிப்டோகரன்சி, இதற்காக, ஒருமுறை விண்ணப்பிக்கும் பொழுது, செய்யப்படும் பதிவேற்றங்களை, மீண்டும் அந்த தகவல்களை மீண்டும் திருத்தம் செய்ய முடியாது.
வெளிப்படை தன்மையானதாக இந்த பரிமாற்றம் உளள்தாக தெரிவித்துள்ளார்.உதாரணமாக நாம் பயன்படுத்துகின்ற மொபைல் போன், சிம் கார்டு நிறுவனம், பணபரிமாற்றம் செய்ய பயன்படுத்தும் செயலி, நம் வங்கிக் கணக்கு, இந்த நான்கும் ஒருங்கிணைந்து, நமது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை நமக்கு காட்டும் வளர்ச்சியை நாம் அடைந்திருந்தாலும், நம்து அனுமதி இன்றி பண பரிமாற்ற சேவையை, மேற்கொள்ள முடியாது என்ற அடிப்படையில் தான் நாட்டில் அனைவரும், டிஜிட்டல் உலகத்திற்க்குள் நுழைந்து விட்ட நிலையில், கரிப்டோகரன்சி என்ற மெய் நிகர் நாணய,வர்த்தகத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்க, நெட்வொர்க் மார்க்கெட்டிங் செயல்பட்டு வருகின்றது.
ஏற்றுமதி, இறக்குமதி வியாபார, நுணுக்கங்கள், பங்குச் சந்தை வர்த்தக நுணுக்கங்கள், போன்ற வருமான வாய்ப்புகள் மக்களிடையே தற்போது தேக்கம் அடைந்துள்ளது, எதிர்காலம் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற இருக்கின்ற கிரிப்டோகரன்சி குறித்து, பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று, இச்சந்தையினை மேம்படுத்துவதற்காக எங்களது அமைப்பு முற்பட்டு வருகின்றது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, வருவதாக வும் தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் கிரிப்டோகரன்சி விழிப்புணர்வு பயிற்சியாளர்களான , இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, தேவராஜன், சுரேஷ் ஜெகநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.