June 20, 2017 தண்டோரா குழு
எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்து கிடந்த நகரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
கிழக்கு எத்தியோப்பியாவிலுள்ள ஹார்லா என்னும் இடத்தில் 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான நகரத்தின் எஞ்சிய பகுதியை எத்தியோப்பியாவின் எசீட்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த இடத்தில் மசூதி ஒன்றையும், அந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மக்களின் இடுகாடுகளும், நினைவு கற்கள் மற்றும் இந்திய நகைகளும் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் உடைந்த கண்ணாடி பாத்திரங்கள், பாறை துகள்கள், ரத்தின கற்கள், கண்ணாடி மணிகள், ஏமன், சீனா, மால்டிவேஸ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. அதோடு 13ம் நூற்றாண்டை சேர்ந்த எகிப்து வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்களும் கிடைத்தது.
முஹம்மது நபி 7ம் நூற்றாண்டில் காலமானார். அவருடைய மறைவுக்கு பிறகு, இஸ்லாம் மதம் கிழக்கு ஆப்ரிக்க கண்டம் முழுவதும் பரவியது. முஹம்மது நபி தன்னுடைய சீடர்களை 7ம் நூற்றாண்டில் அனுப்பினர். அவர்கள் மூலம் இஸ்லாம் மதம் பரவியிருக்க கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது எத்தியோப்பியா கிறிஸ்துவ நாடாக விளங்குகிறது. இருப்பினும், மூன்றில் ஒரு பங்கு மக்கள் இஸ்லாம் மக்கள் அங்கு வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.