November 21, 2022 தண்டோரா குழு
தனது தற்போதைய நிலைக்கு ஸ்டேன்ஸ் பள்ளி தான் காரணம் என்றும் தனது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஸ்டேன்ஸ் பள்ளியில் தான் படித்ததாகவும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் ஸ்டேன்ஸ் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு வைரவிழா நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி தொடங்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நூற்றாண்டு வைரவிழா கொண்டாடம் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் டி-ஸ்டேன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் லட்மி நாராணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அப்போது கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:
படிப்பு என்பது வகுப்பறையோடு முடிந்துவிடுவது அல்ல மட்டுமல்ல. புத்தகம், தேர்வுகளில் மட்டும் கல்வி அடங்கிவிடாது என்பதை ஸ்டேன்ஸ் பள்ளி உணர்ந்துள்ளது. எனது தற்போதைய நிலைக்கு ஸ்டேன்ஸ் பள்ளிதான் காரணம். இதை எங்கு சென்றாலும் கூற முடியும். எனக்கு அடித்தளம் கொடுத்தது இந்த பள்ளி தான்.
நான் படிக்கும் போது சில பள்ளிகளே இருந்தன. அப்போது ஸ்டேன்ஸ் சிறந்த பள்ளியாக இருந்தது. இப்போது பல பள்ளிகள் உள்ளன, இப்போதும் இந்தபள்ளியே சிறந்த பள்ளியாக உள்ளது. என தந்தை, நான் என் மகன் என மூன்று தலைமுறை இந்த பள்ளியில் தான் படித்துள்ளோம்.நல்ல குணாதிசியங்களை கொண்ட மாணவரை உருவாக்குவது ஒரு சிறந்த பள்ளி. ஸ்டேன்ஸ் பள்ளி அத்தனைய பள்ளி.
பல கல்வியாளர்கள் இன்று சிந்திப்பதை இந்த பள்ளியை தொடங்கிய ராபர்ட் ஸ்டேன்ஸ் அன்றே சிந்தித்து செயல்படுத்திக் காட்டியுள்ளார். தொண்டும் தூறவுமே பாரதத்தின் இரு கண்கள் என்று நாம் இப்போது கூறுகிறோம். ராபர்ட் ஸ்டேன்ஸ் இதனை 160 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நூற்றாண்டு வைரவிழா கொண்டாட்டத்தில் ஸ்டேன்ஸ் பள்ளியின் தலைவர் மெர்சி ஒமென், முதல்வர் செலின் வினோதினி, தாளாளர் பிலிப் ஃபோலர், போர்டு மெம்பர் சஞ்சீவ் சுகு, துணை முதல்வர் திவாகரன், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.