• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எனது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி -கோவையில் பேரறிவாளன் பேட்டி !

May 21, 2022 தண்டோரா குழு

கோவையில் அனைத்து இயக்கங்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த பேரறிவாளனுக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் விடுதலை கொடுத்துள்ள நிலையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விடுதலைக்காக உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை வந்துள்ள பேரறிவாளன் இன்று காலையில் கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நபர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.தொடர்ந்தவர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் காந்திபுரத்தில் ஒன்று கூடினர்.

அதனைத்தொடர்ந்து பேரறிவாளன் அற்புதம்மாள் ஆகியோர் சேர்ந்து விடுதலையைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அற்புதம்மாள்,

31 ஆண்டுகால போராட்டம் இது பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதைவிட நாம் இன உரிமையை மீட்டு எடுத்துள்ளோம்.பேரறிவாளன் வந்திருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நாங்கள் இங்கு எதற்கு வந்தோம் என்றால் இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த எல்லாரையும் மனப்பூர்வமாக சந்திக்க வேண்டும் என்று தான்.

என்னுடைய பிரச்சனை என்னவாக இருந்தாலும் ராமகிருஷ்ணனிடம் கூறுவேன். அவரும் எனக்கு சில விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளார். இவற்றை செய்யலாம் இவற்றை செய்ய வேண்டாம் என்றெல்லாம் கூறி உள்ளார்.இது ஒரு அமைதிப் போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.நாம் யாரையும் எதிர்க்கவில்லை. வன்முறையை கையாளவில்லை.நமக்கு என்ன வேண்டுமோ நமது குறிக்கோள் என்னவென்றால் மாநில உரிமை வீணாகப் போகிறது.

இதன் மூலம் இவர்களுடைய விடுதலை தடுக்கப்படுகிறது .இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் நீண்ட பெரிய சட்டப் போராட்டம் நடத்தியதால் சட்டத்தின் மூலம் விடுதலையாகியுள்ளார்.அதைப்போல் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம். அனைத்து அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இந்த சமுதாயத்திற்கு பாடுபடுகின்ற அனைத்து இயக்கங்கள் என சாதாரண தொண்டர்கள் கூட குரல் கொடுத்துள்ளனர். முகம் தெரியாத அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார்.

தொடர்ந்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன் கூறும்போது,

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை பெற்று 31 ஆண்டுகளுக்குப் பின்னால் விடுதலையடைந்து இருக்கின்ற தோழர் பேரறிவாளனுக்காக முப்பத்தி ஒரு ஆண்டு காலமும் அவரோடு மட்டுமில்லாமல் இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு உரிமைகளுக்கு ஒரு விடிவைத் தேடித் தந்த தாய் அற்புதம்மாள் இரண்டு பேரும் இங்கே வந்து இருக்கின்றனர். கோவை மாவட்டம் முழுவதும் தோழர் பேரறிவாளனுக்கு ஆதரவாக பல்வேறு வகையில் அனைத்து கட்சிகளும் இங்கு போராடி இருக்கின்றோம். தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி மூன்று நாட்களுக்குள் கூடி அனைத்து கட்சிகளும் சட்டக்கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அதேபோல் பேரறிவாளனுக்காக வழக்கறிஞர் சிவா கடுமையாக போராடி உள்ளார்.அதன் விளைவாக அன்றைய அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது .மக்கள் போராட்டத்தால் இந்த இயக்கங்களின் போராட்டங்களால் அப்படிப்பட்ட போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக நாம் இன்று பேரறிவாளனை பெற்றிருக்கிறோம். மீண்டும் 6 பேரையும் விடுதலை செய்கின்ற வரைக்கும் நாம் விழிப்போடு இருந்து பாடுபடுவோம். இங்கே நம்மை சந்திக்க வந்த பேரறிவாளனுக்கும் அற்புதமாவிற்க்கும் அனைத்து கட்சிகளின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேரறிவாளன் கூறும்போது,

எல்லாருக்கும் வணக்கம் 31 ஆண்டுகால நீதிக்கான போராட்டத்தில் தமிழகம் தலுவியும் சரி குறிப்பாக இந்த கோவையிலும் சரி அண்ணனுடைய போராட்டமும் அவர் இந்த வழக்கில் காட்டிய அக்கறையும் அது அனைவருக்கும் தெரியும்.அதற்காக அவரை சந்தித்து நன்றி சொல்வது மட்டுமல்லாமல் அனைத்து கட்சி நண்பர்கள் மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களையும் பார்த்து நன்றி தெரிவிப்பதற்காக வந்துள்ளேன்.எனது விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.

மேலும் படிக்க