April 15, 2016 முகமது ஆஷிக்
தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் விஜயின் படமான தேறி படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டாலும், மூன்று சூப்பர் ஹிட் படங்களின் கலவையாகத்தான் உள்ளது என விமர்ச்சனங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அடுத்தடுத்து அந்தப் படத்திற்கு சோதனை ஏற்பட்டுள்ளது. முதலாவதாக அதிக தியேட்டர்கள் கிடைக்காததால் வேதாளம் படத்தின் சாதனையை முறியடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது தேறி. இரண்டாவதாக அகில உலக சூப்பர் ஸ்டார் என அவராலேயே அலைத்துக் கொள்ளப்படும் பவர் ஸ்டார் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தேறியின் இரண்டாம் பாகத்தில் அட்லி அழைத்தால் தான் நடிக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அது விஜய் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவதாகக் கோவையில் படம் வெளியிடப்பட்ட அன்று அதிகாலை நேரு அரங்கம், கோட்டை மேடு, திருச்சிரோடு மற்றும் கவுண்டம்பாளையம் பால் ஆவின் பூத் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த பால் திருடப்பட்டுள்ளது. இது தற்போது மட்டும் நடக்க வில்லை எனவும், கடந்த முறை விஜய் படம் வெளியான போதும் இதே போலத்தான் நடைபெற்றது எனவும் பால் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை யார் என தெரியாததால் மேலாளர்களே தங்கள் கைகாசை போட்டுக் கட்டியுள்ளனர். ஆனால் இந்தமுறை இவர்கள்தான் திருடினார்கள் எனத் தெரிந்ததை அடுத்து இது குறித்து ஆவின் நிர்வாகத்திடமும், காவல்துறையினரிடமும் புகார் கொடுக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி காவல்துறை அதிகாரிக்கு திருட்டுப்பாலில் அபிசேகம் எனக் கிண்டலடித்து வருகின்றனர்.