• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.ஜி.ஆர்., ஜெ கட்டி காப்பாற்றிய கட்சியை ஒரு சிலரின் ஆணவம்,பதவி வெரியால் சிக்கித் தவிக்கிறது

September 15, 2022 தண்டோரா குழு

எம்.ஜி.ஆர்., ஜெ கட்டி காப்பாற்றிய கட்சியை ஒரு சிலரின் ஆணவம்,பதவி வெரியால் சிக்கித் தவிக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை அண்ணா சாலையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரயாதை செலுத்தினார்.

தொண்டர்களுடன் வந்த டிடிவி தினகரன் அண்ணா உள்ளிட்ட தலைவருக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்

அப்போது பேசிய அவர் :

அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து வீர அஞ்சலி செலுத்தி இருக்கின்றோம். மேலும் இன்னொரு கட்சி (அதிமுக) யில் நடக்கும் கூத்தை பற்றி பதில்சொல்ல வேண்டியதில்லை என தெரிவித்தார்.மேலும் அது நீதிமன்றத்தில் போராடி கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர் என கூறினார்.

எம்ஜிஆர்,ஜெ கட்டிகாத்த இயக்கம். ஒரு சிலரின் ஆணவத்தால்,பதவி வெறியால்,சுயநலத்தால் சிக்கி இருக்கின்றது.இதற்கு காலம் பதில் சொல்லும் எல்லாம் சரியாகிவிடும்.தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை. திராவிட மாடல் என கூறிக்கொண்டு வரிசுமையை ஏற்றி துன்படுத்துகின்றது.

துன்பபடுத்துவதுதான் திராவிட மாடல் என்பதை திமுக நிருபித்து வருகின்றது. இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பதில் சொல்வார்கள் என தெரிவித்தார்.மேலும் எந்த மொழியையும்,எந்த மாநிலத்திலும் திணிக்க கூடாது. தமிழகத்தை பொறுத்த வரை மக்கள் விரும்பி ஏற்று கொள்ளாமல், திணித்தால் ஏற்று கொள்ள மாட்டார்கள் என கூறினார். கொரொனா பாதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்டியை குறைக்க வேண்டும். கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டால் பாதிக்கப்பட்டனர். இந்த திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.மின்கட்டணம் மக்களால் ஏற்கும் அளவிற்கு இருக்க வேண்டும். வாட்டி வதைக்கும் வகையில் இருக்க கூடாது என கூறிய அவர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தி ஊழலை ஒழிப்போம் ,முறைகேடுகளை அனுமதிக்க மட்னோம் என்ற வாக்குறுதிகளை மட்டும் செயல்படுத்தினால் போதாது.

நீட் தேர்வு ரத்து ,ஆயிரம் ருபாய், சொத்து வரி குறைப்பு என பல வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை. திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என மக்கள உணர்கின்றனர். எடப்பாடி ஆட்சி மீது கோபம் அடைந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை போல இந்த ஆட்சியும் மாறும், அண்ணா , பெரியார், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளர்த்து இருக்கின்றது. மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க