August 28, 2017 தண்டோரா குழு
புதுதில்லியிலிருந்து அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்யவிருந்த எர் இந்தியா விமானத்தில் எலியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் 9 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
புதுதில்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்திலிருந்து அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ நகருக்கு பயணம் செய்ய Boeing 777 நேரடி விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் எலி ஒன்று அங்கும் இங்கும் ஓடுவதை பயணிகள் கவனித்து, விமான ஊழியர்களுக்கு தகவல் தந்தனர்.
உடனே விமானத்தின் பொருளாதார வகுப்பிலிருந்த 172 பயணிகளும், வணிக வகுப்பில் பயணித்த 34பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டனர். விமானத்திலிருந்த எலியை நச்சு வாயு மூலம் அழிக்க சுமார் 6 நேரம் ஆகியது.
இதனால் விடியற்காலை சுமார் 2௦ மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 9 நேரம் தாமதமாக கிளம்பியது.
விமானம் அவ்வளவு தாமதமாக கிளம்பியது, பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
“கேட்டரிங் வாகனங்கள் மூலம் தான், எலிகள் விமானத்திற்குள் நுழைகின்றன. அவைகளை நச்சு வாயு மூலம் அழிக்காவிட்டால், விமானத்திலிருக்கும் மின்சார கம்பிகளை கடித்துவிடும், இதனால் விமானத்தை இயக்கும்போது, கட்டுபாட்டை இழந்துவிடும்” என்று இந்திராகாந்தி சர்வதேச விமானநிலைய அதிகாரி தெரிவித்தார்.