March 11, 2022 தண்டோரா குழு
எல்ஐசி பங்கு விற்பனையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை அகில இந்திய இன்சூரன்சு ஊழியர் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.
இதில் பல்லாயிரக்கணக்கான இன்சூரன்சு ஊழியர்கள் பங்கேற்று ஒன்றிய அரசிற்கு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக வியாழனன்று கோவையில் எல்ஐசி அனைத்து அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை திருச்சாலையிலுள்ள எல்ஐசி பகுதி அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் வி.சுரேஷ், துளசிதரன் உள்ளிட்ட திரளான ஊழியர்கள் பங்கேற்று இன்சூரன்ஸ் பங்குகளின் விற்மனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி முழக்கமிட்டனர்.
இதேபோன்று கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் கிளை, அவிநாசிசாலை கிளை, 100 அடி சாலை கிளை, டாடாபாத் கிளை, வடகோவை கிளை,ஆர்.எஸ்.புரம் கிளை, போத்தனூர் கிளை மற்றும் மாவட்டங்களில் அமைந்துள்ள மற்ற கிளைகிளின் முன்பாகவும் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டம் நடைபெற்றது.