March 22, 2017 தண்டோரா குழு
தீவிரவாத தாக்குதல் காரணமாக சுமார் ஒரு மாதம் மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதி சாலை செவ்வாய்க்கிழமை(மார்ச் 21) மீண்டும் திறக்கப்பட்டது.
இது குறித்து பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு அதிகாரி கூறியதாவது:
“பிப்ரவரி மாதத்தில் இஸ்லாமபாத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 7௦ பேர் உயிரிழந்தனர். இதற்கு ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வரும் தீவிரவாதிகள் தான் காரணம்.இதையடுத்து இரண்டு நாடுகளுகளின் எல்லைப்பகுதி மூடப்பட்டது.
பாகிஸ்தானின் டோர்க்ஹம் எல்லை பகுதியை மீண்டும் திறக்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் உத்தரவிட்டார். அவருடைய உத்தரவு கடிதத்தை திங்கள்கிழமை(மார்ச் 2௦) பெற்றுக்கொண்டோம்.
இதன் விளைவாக வர்த்தகத்திற்காக செவ்வாய்க்கிழமை(மார்ச் 21) காலை 7 மணியளவில் எல்லைப்பகுதி சாலை திறக்கப்பட்டது.
எல்லையை திறந்த பிறகு, ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான லாரிகள் எல்லையை கடந்து பாகிஸ்தான் நாட்டிற்குள் வந்தன. தெற்கு ஆசியாவின் பரபரப்பான வர்த்தகம் நடைபெறும் பகுதியான இந்த இரண்டு நாடுகளின் எல்லைகள் திறக்கப்பட்டது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.