May 21, 2016 தண்டோரா குழு
நில இடமகன்ற தகவல் ஒழுங்கு முறை அமைப்பின் தகவல்களைத் தவறாக பரப்புவார்களுக்கும், பிரசுரிப்புவர்களுக்கும், 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்க இந்திய அரசு மசோதா கொண்டு வரவுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானப்படி ஜம்மு காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதியாகும்.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு. அதனால் இந்தியாவின் எல்லைகளைத் தவறாகச் சித்தரிப்பவர்களைக் கடுமையாகத் தண்டிக்க அரசு முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் இந்தியாவின் முடிவைக் கண்டித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தவறு என்றும், அது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், சரித்திர உண்மைக்குப் புறம்பானது ஆகும் என்றும் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும், சர்வதேசச் சட்டத்தை இந்தியா மீறுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் பாகிஸ்தான் ஐ.நா சபைக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி எந்த மூன்றாம் நாட்டிற்கும் உரிமை இல்லை என்று
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் பாகிஸ்தானுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் பாகிஸ்தான் தங்கள் விவகாரத்தை மட்டும் கவனித்தால் போதுமானது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வரைபடங்களை வெளியிடுமுன் இந்தியாவின் ஒப்புதலைப் பெற்ற பின்னே பிரசுரிக்கவேண்டும். தவறான தகவல்கள் நாட்டின் பாதுகாப்பையும், இறையாண்மையையும், நேர்மையையும் கேள்விக்குறியாக்கிவிடும் என்றும் கருத்துக் கூறியுள்ளார்.
இது போன்ற தவறான வரைபடத்தை வெளியிடுவது இது முதல் முறையன்று. மீண்டும் மீண்டும் தவறான காஷ்மீர் வரைபடத்தைப் பிரசுரித்த காரணத்திற்காக அல் ஸஸீரா ஒளி அலைவரிசையைக் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஒளிபரப்பத் தடைசெய்திருந்ததது இந்திய அரசு.
கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுடன் இணைத்து தவறான வரைபடங்களைப் பல நாடுகளிலும் பிரசுரிக்கின்றன அதை அடுத்து 2014ம் ஆண்டு தேசிய
புவியியலாய்வு நிறுவனம் கூகுள் நிறுவனத்தின் மீது புகார் அளித்தது.
2011ம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார இதழில் இந்தியாவின் வரைபடத்தில் காட்டப்பட்ட ஜம்மு காஷ்மீர் எல்லைகளைக் காகிதம் கொண்டு மறைத்துள்ளனர். அதன்படி 28,000 பிரதிகள் திருத்தப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஒரு சுதந்திரமான, பாரபட்சமின்றிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.