• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எஸ்எஸ்ஐ மந்த்ரா நிறுவனத்தின் அறுவை சிகிச்சை ரோபோட் கோவையில் அறிமுகம்

February 13, 2023 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் இந்தியாவில் தயாரான அறுவை சிகிச்சை ரோபோட் நிறுவப்பட்டுள்ளது.

உலகின் பிரபலமான ரோபோட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சுதிர் பி ஸ்ரீவத்ஸவா அவர்களின் முயற்சியில் எஸ்எஸ்ஐ மந்த்ரா உருவாகியுள்ளது.இந்தியாவில் புதிய வகை அறுவை சிகிச்சை முறையை ஏற்படுத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது.அதிலும், கோவை, தமிழ்நாட்டு மக்களுக்கு எளிதாகவும், மலிவானதாகவும் கிடைக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.எஸ்எஸ்ஐ மந்த்ரா, விலையில் மலிவானது.சர்வதேச விலையை ஒப்பிடும்போது நான்கில் ஒரு பங்கு விலை தான் இது. தரத்திலும்,மருத்துவ உயர் தொழில்நுட்பத்திலும், அறுவை சிகிச்சை செய்யவும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த ரோபோட், சிறுநீர் பை புற்றுநோய், மகப்பேறு தொடர்பான புற்றுநோய், இரைப்பை குடல் புற்றுநோய், இருதய நோய் அறுவை சிகிச்சைகளை சிறப்பாக மேற்கொள்ள உதவும்.

இந்த அமைப்பு புதுடில்லியில் உள்ள ராஜிவ் காந்தி புற்றுநோய் நிறுவனம், ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவினி மருத்துவமனை, ரெய்ப்புரில் உள்ள சிபிசிசி யுஎஸ்ஏ புற்றுநோய் மருத்துவமனை ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை 70க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் மட்டுமின்றி உலகில் பல நோயாளிகள் இந்த புரட்சிகர அமைப்பால் பயனடைந்துள்ளது. மருத்துவ உலகில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிற்கு அதிக தேவை உள்ளது. சர்வதேச அளவில் இதன் சந்தை மதிப்பு 3.6 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 2022-2030 கால அளவில் ஒவ்வொரு ஆண்டும் 19.3 சதம் வளர்ச்சியை எட்டும்.

இதன் துவக்க விழாவில், இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில்,

“இந்த அதிநவீன சக்தி வாய்ந்த தொழில்நுட்பம், இந்தியாவில் வளர்ச்சி பெற்றுவருவதை பார்க்கும்போது, மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இயந்திர அறுவை சிகிச்சையால், மருத்துவ செலவு குறைகிறது. இது, இந்தியாவில் மருத்துவ சுற்றுலா வளர்ச்சிக்கு உதவும்,” என்றார்.

இந்துஸ்தான் மருத்தவமனையின் ரோபோட்டிக் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர். மாணிக்கம் ராமலிங்கம் பேசுகையில்,

“இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவை இந்துஸ்தான் மருத்துவனையில் நிறுவப்பட்டுள்ளது, இந்த மருத்துவமைனயால் அதிநவீன சிகிச்சையை மக்களுக்கு அளிக்க முடியும். சமுதாயத்தில் உள்ள எளிய மக்களுக்கும் பேருதவியாகவும் தரமான சிகிச்சை பெறவும் வாய்ப்பாக இருக்கும்,” என்றார்.

எஸ்எஸ் இன்னோவேஷன்ஸ் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மற்றும் ரோபோ டாக்டர் சுதிர் ஸ்ரீவத்ஸா பேசுகையில்,

“கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் இந்தியாவில் தயாரான ரோபோட் நிறுவியதால், தமிழ்நாட்டின் மருத்துவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் முதல் முயற்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு தரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் மருத்துவ உயர்தொழில்நுட்பத்தால், 60 சதம் அளவிற்கு மருத்துவ கட்டணத்தை பெற முடியும். தங்கத்தரத்திலான மருத்துவ சிகிச்சையை அனைவரும் எளிதாக பெற வேண்டும் என்பது தான் எஸ்எஸ்ஐ நிறுவனத்தின் முக்கிய நோக்கம்,” என்றார்.

ராஜிவ் காந்தி கேன்சர் இன்ஸ்டியுட் மருத்துவ இயக்குனர் டாக்டர் சுதிர் அகர்வால் பேசுகையில்,

“எனது நோயாளிகள் பலருக்கு எஸ்எஸ்ஐ மந்த்ரா அமைப்பை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்துள்ளேன். மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள பேருதவியாக இருப்பதோடு, திறம்பட செயல்படுகிறது. தரத்தாலும், மலிவாலும் இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலக அளவிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,” என்றார்.

மேலும் படிக்க