August 31, 2022 தண்டோரா குழு
எஸ்எஸ்விம் பள்ளி சார்பில் ‘உருமாறும் இந்தியா மாநாடு’ செப் 1–3 வரை நடைபெற உள்ளது.
25வது ஆண்டை நினைவு கூறும்விதமாக எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் ‘உருமாறும் இந்தியா மாநாட்டை’ நடத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது இந்தியாவில் உள்ள புகழ் பெற்றவர்களின் கல்வி சங்கமமாக இருக்கும். எஸ்எஸ்விஎம் ‘உருமாறும் இந்தியா மாநாடு’ மாநாடு எஸ்எஸ்விம் உறைவிடப் பள்ளி, மேட்டுப்பாளையத்தில் செப்டம்பர் 01, 02 மற்றும் 03, 2022 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.3 நாள் மாநாட்டில் அற்புதமான பேச்சாளர்கள் தங்கள் பாட அறிவு நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதோடு பார்வையாளர்களை நாளைய தலைவர்களாக மாற்றவும் உள்ளனர்.
முதன்முறையாக,இந்த மாநாட்டில் தங்களின் வளர்ச்சிக்காகவும் வெற்றிக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆசிரியர்களை அங்கீகரிப்பதுடன், தங்கள் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்காக, தொழில்துறை நிபுணர்கள் குழுவிடம் மாணவர்கள் தங்கள் தொழில் முனைவோர் யோசனைகளை வழங்கக்கூடிய ஒரு நிகழ்வும் நடைபெற உள்ளது.
SSVM Transforming India Conclave போட்டிக்கு தமிழகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் அணிகளிடமிருந்து 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. உத்வேகம் தரும் குரு விருதுக்கு 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் உள்ளீடுகள் தென்னிந்தியாவின் பல்வேறு பள்ளிகளிலிருந்தும் வட இந்திய மாநிலங்களிலிருந்தும் பெறப்பட்டுள்ளன.
மாநாட்டின் முதல் நாள், தலைமை விருந்தினரான பத்ம பூஷன் நம்பி நாராயணன், ஸ்வாதி ரோஹித்துடன் இணைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநாட்டை துவக்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் விவேக் கருணாகரன், அனுபமா விருக்ஷம் மற்றும் முகமது இர்பான் போன்ற சிறந்த சாதனையாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள்.
மாநாட்டின் 2வது நாளில் சி கே குமரவேல், பூஜா ஸ்ரீனிவாச ராஜா, டாக்டர் ராம்குமார் போன்ற பிரபல தொழில்முனைவோர் மற்றும் ஆளுமைகள் நிறைந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுடன் பிரசித்தி சிங், லிடியன் நாதஸ்வரம், ஷரண் போன்ற இளம் தொழில்முனைவோர், சாதனையாளர்கள் மற்றும் தலைவர்கள் இந்தியாவை எவ்வாறு மாற்றியமைக்கிறார்கள் என்பது குறித்து தங்கள் பயணத்தைப் பற்றி பேசுவார்கள். சிறந்த மாணவர் குழுக்கள் தங்கள் தொழில் முனைவோர் யோசனைகளை மாநாட்டு மேடையில் முன்வைப்பார்கள். அதில் திறமையானவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆசிஷ் வித்யார்த்தி விருது வழங்குவார்.
மாநாட்டின் 3 ஆம் நாளில், நாளைய இந்தியாவில் ஆசிரியர்களின் பங்கு பற்றி தொழில் வல்லுநர் தீபா ஆத்ரேயா பேச இருக்கிறார் அவரைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்து இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் பிரசித்தி பேசுகிறார். மாணவர்களின் ஆல் டைம் பேவரிட் ஹருன் ராபர்ட் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற உள்ளது. ஆசிரியர்கள், அவர்களின் அயராத முயற்சிகள் மற்றும் சேவைகளுக்காக, மிகவும் திறமையான சேத்தன் பகத் அவர்களால் குரு விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட இருக்கிறார்கள்.
இது தவிர, உலகத் தரம் வாய்ந்த கலைஞர்கள் மற்றும் குழுக்கள் இடம்பெறும் உற்சாகமிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.